உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

553

ஒப்பந்தமாகி விட்டது. ஒப்பந்தமாகி விட்டது என்றால், இதிலே மத்திய அரசும், பல்கேரிய அரசும் ஒப்புக்கொண்டு விட்டது என்பதாகும். முதல் தவணையை 19.6.79க்குள் செலுத்துங்கள் என்கிறார்கள். அதற்கு ஆதாரம், இதோ இந்தக் கடிதம். ஆனால், நிலைமை என்ன? 26.10.79 தேதியில் டெல்லி யிலிருந்து, பூம்புகார் கார்ப்பரேஷனுக்குக் கடிதம் வருகிறது. அதிலே,

'There are some reports that the Oulgarian Ship order has run into difficulties owing a price increase demanded by the Bulgarian Authorities. Could you kindly let us know by telex whether these reports are correct.

என்று டெல்லி, மத்திய அரசின் ஷிப்பிங் அண்டு டிரான்ஸ்போர்டு இலாகாவிலே இருந்து பூம்புகார் கார்ப்ப ரேஷனுக்கு இப்போது ஒரு டெலக்ஸ் வந்திருக்கிறது. ஆக, இந்தக் கப்பலை வாங்கியிருந்தால், இந்நேரம் அந்தக் கப்பல் இங்கே வந்திருக்க முடியும். ஆனால், வாங்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? 13.1, 13.2 என்றிருந்து, பிறகு அதனுடைய விலை 112 கோடி குறைக்கப்பட்டுவிட்டதன் காரணமாக, கொள்ளை தடுக்கப்பட்டது என்ற அந்த அளவிலேதான் இந்தக் கப்பல் வாங்கப்படாமல், கடைசியிலே மத்திய அரசாங்கத்திட மிருந்து கடிதம் வருகின்ற அளவிற்கு வந்திருக்கிறது.

'There are some reports that the Bulgarian Ship order has run into difficulties owing a price increase demanded by the Bulgarian Authorities. Could you kindly let us know by telex whether these reports are correct.

என்று கேட்கின்ற அளவிற்கு நிலைமை உருவாகியிருக் கின்றது. எனவே, இதுவரை இந்தக் கப்பல் வியாபாரத்தைச் செய்யாமல், இனிமேல் வாங்கப் போகிறோம் என்று சொன்னா லும் கூட, இந்த அக்டோபர் மாதம் வரை வாங்காமல் இருந்தது சரியல்ல.

கப்பல்களில்

அதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற நஷ்டம், வாடகைக் கப்பல்களில் நிலக்கரி கொண்டுவர பல்வேறு செலவுகள் இவைகளை எல்லாம் கணக்கிட்டுப் வேண்டும். தாங்கள் திட்டமிட்டபடி ஏறத்தாழ 4 கோடி ரூபாய்

பார்க்க