உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கமிஷன்- பச்சையாகச் சொல்ல வேண்டுமானால் லஞ்சம், அது கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக இந்த அளவுக்கு இந்தக் கப்பல் பேரத்தில் இவ்வளவு விளையாட்டுக்களை விளையாடி இருக்கிறார்கள். நான் முதலமைச்சரையும் சேர்த்துக் குற்றம் சாட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். விலையை உயர்த்தி கொள்ளையடிக்க சதி நடத்தப்பட்டது. அந்நியச் செலாவணி மீறல் என்கிற அளவுக்குக் கூட சட்டத்தை மீறுகிற முயற்சிகள் நடை பெற்றிருக்கின்றன. பல்கேரியாவில் இதற்குப் பெயர்- அட்ரஸ் கமிஷன் என்ற செல்லப் பெயரை வைத்திருக்கிறார்கள். பல்கேரியாவில் அட்ரஸ் கமிஷன் என்று வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் 22 மாநிலங்களில் இதுவரை நடைபெறாத மகா பெரிய ஊழல், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஊழல், அந்த இணையற்ற ஊழலை நடத்திக் காட்டிய நம்முடைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தான் என்னைப் பார்த்து 'ஊழலின் மொத்த உருவம்' என்று புதுக்கோட்டையில் பேசியதாக நான் கேள்விப்படுகிறேன். நாங்கள் இதை வாங்குகிறோம் என்று சொன்னாலும், அதே விலைக்கு வாங்கினாலும் இந்த நான்கு கோடி ரூபாய் கமிஷன் உங்களுக்குக் கிடைக்க இருக்கிறது. வாங்காவிட்டாலும் பெரிய செலவு. தேவையற்ற செலவு. நம்முடைய மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆகியிருக்கிறது என்ற அந்தக் குற்றத்திலிருந்து நீங்கள் தப்ப முடியாது. ஆகவே, ஊழல், ஊழல் என்று எங்களைப் பார்த்துப் பேசுகிற நீங்கள் இன்றைக்கு கடைந்தெடுத்த, ஜமக்காளத்தில் வடிகட்டிய ஊழல் பேர்வழிகளாக இருக்கிறீர்கள் என்று இந்தக் கண்டனத் தீர்மானத்தில் எடுத்துக்கூறி அமர்கிறேன். வணக்கம்