உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

555

பாராட்டுரைகள்

பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்குப்

பாராட்டு

உரை : 76

நாள் : 31.03.1962

கலைஞர் மு. கருணாநிதி : சட்டமன்றத்தலைவர் அவர்களே, இன்றையதினம் ஒரு புனிதம் நிறம்பியதும், பொறுப்பு மிகுந்ததுமான ஒரு பதவியிலே அமர்ந்திருக்கும் தங்களை வாழ்த்தி வரவேற்று பாராட்டுகின்ற வாய்ப்பு பெற்றமைக்காக நாங்கள் பெருமகிழ்ச்சியடைகின்றோம். இந்த மாமன்றத்திலே இன்முகம் காட்டி, புன்னகை புரிந்து, எத்தகைய சிக்கல்களையும் தீர்க்க வழிகண்ட பெரியவர், மறைந்த திரு. கிருஷ்ணாராவ் அவர்களுடைய நல்ல திறமை வாய்ந்த முறைகளைப் பின்பற்றித் தாங்கள் எங்களை நடத்திச் செல்வீர்கள் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஐயமும் ஏற்படவில்லை. தாங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலே, பத்தமடைப் பள்ளியிலே பயின்று, இந்தப் பதவியை ஏற்கும் வரையில் பத்தமடைப் பாய் கூட்டுறவு ஸ்தாபனத்தினுடைய தலைவராகத் தாங்கள் இருந்தீர்கள் என்பதை எண்ணுகின்ற நேரத்தில், அந்தப் பாயைப் போன்ற மிருதுவான த ன்மையை உங்கள் இருதயம் பெற்றிருக்கும் என்று நம்புகின்றேன். மிருதுவான இருதயம், மென்மையான இருதயம் இந்த மாமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்புகளை அளிக்கும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். தங்களுடைய பெயருக்கேற்ப, எதிர்கட்சியைச் சேர்ந்த எங்களைச் செல்லமாக நடத்துவீர்கள் என்று கருதுகிறோம். அப்படியானால் ஆளும் கட்சிக்காரர்கள் செல்லமாக நடத்தப்படவேண்டாமா என்று ஆளும் கட்சித் தலைவர் அவர்கள் விழிகளால் எங்களைப் பார்த்துக் கேட்கிறார். ஆளும் கட்சிக்கு அதிகமான செல்லம் கொடுத்தால் பிள்ளை கெட்டுவிடும். ஆகவே,