உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

559

என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். பிடில் வாசிக்கின்றபோது அதிலுள்ள வில்லைப்போன்று- இந்தப் பக்கம் இழுத் தால் ஒரு நாதம் வரும். அந்தப் பக்கம் இழுத்தால் இன்னொரு நாதம் கிளம்பும். அதேபோல் ஆளும் கட்சிப் பக்கம் இழுத்தாலும், எதிர்க்கட்சிப் பக்கம் இழுத்தாலும் இனிய நாதம் கிளம்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்வேன்.

இந்தச் சட்டமன்றத்தை அப்படி நீங்கள் நடத்துவதற்கு எதிர்க்கட்சியின் சார்பில் குறிப்பாக அவை முன்னவர் அவர்கள் குறிப்பிட்டதுபோல், திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும். எங்களுடைய ஒத்துழைப்பு ஒவ்வொன்றும் உங்களுக்கு இருக்கும் என்று கூறிக்கொள்கிறேன். துணைத் தலைவரைப் பொறுத்தவரையில் அண்ணா அவர்கள் இருந்தபோது இந்தப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க முன்வந்தார்கள். அந்த முறை இப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. அதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. இந்த மாமன்றத்திற்கு ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிற தங்களையும் துணைத் தலைவர் அவர்களையும் வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறேன்.