உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மகிழ்ச்சியடைகிறேன்' என்று வெல்லிங்டன் பிரபு குறிப்பிட்டு இந்த நாற்காலியை அப்போது பரிசாக வழங்கினார்கள் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

வர

அப்பேர்ப்பட்ட, பெருமை மிகுந்த, நீண்டகால லாற்றுப் புகழ் வாய்ந்த ஒருநாற்காலியில் தாங்கள் இன்றைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள். இந்த நாற்காலியைக் கடந்த காலத்தில் பல சான்றோர்களும், பல ஆன்றோர்களும், பல மேதைகளும் அலங்கரித்திருக்கிறார்கள். இந்த நாற்காலியில் அமர்ந்தவர்கள் அமைச்சர்களாக ஆனதும் உண்டு; அமைச்சர் களாக இருந்தவர்கள் இந்த நாற்காலியில் அமர்ந்ததும் உண்டு. தங்கள் நிலை என்னவோ எனக்குத் தெரியாது. எனினும் தாங்கள் மேலும் பல பொறுப்புக்களை ஏற்றிட வேண்டுமென்ற அவாவினைத் தெரிவித்து, இந்த மன்றத்திலே உங்களை வாழ்த்தி, வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அவையின் முன்னவர் திரு. மனோகரன் அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதுபோல் ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் சம நிலையில் தாங்கள் தீர்ப்புக்களை வழங்குவீர்கள் என்றும், இரு கட்சிகளையும் சமமாக நடத்துவீர்கள் என்றும் நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. ஏனென்றால் தங்கள் கடந்தகால சட்டமன்ற வாழ்க்கையில் அடிக்கடி சபாநாயகரிடத்தில் தகராறு செய்பவர்கள் தாங்களாகவேதான் இருந்திருக்கிறீர்கள். அவைகளில் நியாயமான கோரிக்கைகள் இருந்திருக்கும் அல்லது சபாநாயகரால் வேறுவிதமாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கோரிக்கைகளும் இருந்திருக்கும். ஆனால் அதேநேரத்தில் சபாநாயகருக்கு அடங்கிச்செல்லும் பெருந்தன்மையையும் உங்களிடத்தில் நாங்கள் பல நேரங்களில் கண்டிருக்கிறோம். அந்தப் பெருந்தன்மை இன்றைக்கு நீங்கள் அமர்ந்திருக்கின்ற இருக்கைக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமையும் என்று கருது கிறேன். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாக, உங்களு டைய பெயரே முனு ஆதி; முனுவை ஆளும் கட்சிக்கும், ஆதியை எதிர்க்கட்சிக்கும் தாங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆதியில் இருந்த கட்சி அல்லவா? அப்படிப் பகிர்ந்தளிப்பீர்கள்