உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

557

பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்குப் பாராட்டு

உரை : 77 77

நாள் : 06.07.1977

கலைஞர் மு. கருணாநிதி: பேரவையின் தலைவர் அவர்களே! இந்தப் பேரவையில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, வரவேற்று, வாழ்த்திப் பாராட்டப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன். அதைப்போலவே, துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இளம் நண்பர் திருநாவுக்கரசு அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்தி, வரவேற்றுப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தப் பேரவையினுடைய மாண்புகளும், மரபுகளும் தாங்கள் அறியாதது அல்ல. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தப் பேரவையிலே தாங்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப் பேற்று ஆழ்ந்த அனுபவத்தையும் ஆற்றலையும் பெற்றுத் திகழ்கின்றீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த நாற்காலியின் சரித்திரத்தைப் புரட்டிப் பாராத்தால் 1922 ஆம் ஆண்டு வெல்லிங்டன் பிரபுவும், வெல்லிங்டன் சீமாட்டியும் சென்னை மாநகரத்திலே அமர்ந்து, சென்னை மாகாண சட்டப் பேரவைக்கு, அப்போது கவுன்சில் என்று இதற்குப் பெயர், வழங்கிய, ஆடம்பரமான, அலங்காரமான நாற்காலியாகும். ஒருவேளை அந்த நாற்காலிதான் இப்போது இருக்கிறதோ? இல்லையோ? அது எனக்குத் தெரியாது. அந்த நாற்காலியை 1922ஆம் ஆண்டு வெல்லிங்டன் பிரபுவும் அவருடைய துணைவியாரும் பரிசாக வழங்கினார்கள். அப்படி வழங்கிய நேரத்தில் வெல்லிங்டன் பிரபு குறிப்பிட்டார்-‘ இந்த மாமன்றம் 1921 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது என்பதை அறிய மெத்த