உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆளாக்கிய அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலே எங்களை எண்ணுகிற நேரத்தில் நான் இறும்பூதெய்துகின்றேன் ஒரு காங்கிரஸ்காரராக இருந்தீர்கள் என்பது மாத்திரமல்ல, கதர் சட்டை அணிந்த காரணத்தாலே நீங்கள் காங்கிரஸ்காரர் என்று நீங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. பத்தோடு பதினொன்று. அத்தோடு இதுவொன்று என்கின்ற காங்கிரஸ்காரராக இருந்ததில்லை. பத்தரைமாத்துப் பசும்பொன்னாக காங்கிரஸ் இயக்கத்திலே தியாகச் சுடராக வாழ்ந்தீர்கள். நீங்கள் கதர் ஆடை உடுத்தி இருந்தாலும், நீங்களே தக்களியிலே நூல் நூற்று. இராட்டையிலே நூல் நூற்று அப்படிக் கதர் ஆடை உடுத்திய காங்கிரஸ் தியாகி நீங்கள். தேசத்திற்கு நீங்கள் ஆற்றியிருக்கிற தொண்டு அளவிடமுடியாத ஒன்றாகும். நீங்கள் யாத்திருக்கிற இலக்கியங்கள் சிலப்பதிகாரத்துக்கு நீங்கள் சேர்த்திருக்கின்ற சிறப்பு. கட்டபொம்மனுக்கு, கப்பலோட்டிய தமிழனுக்கு தமிழகத்திலே நீங்கள் தந்திருக்கிற வடிவம் - இவைகள் எல்லாம் என்றும் போற்றிப் பாராட்டத்தக்க ஒன்று என்பதை நான் இந்த நேரத்திலே ஞாபகப்படுத்துகின்றேன். தாங்கள் மேலவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இன்று நம்முடைய நண்பர் திரு. சுவாமிநாதன் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். கடந்த 22 ஆண்டுகளாக இந்த அவை நடந்துகொண்டிருக்கிறது. இந்த 22 ஆண்டுகளாக இருந்து வந்த சம்பிரதாயம் இன்றுமுதல் மாற்றப்பட்டு தமிழிலே நடவடிக்கைகள் அனைத்தும் நடக்கிறதென்றால், அப்படிப்பட்ட சம்பிரதாயத்தை மாற்றிய பெருமை நமது மதிப்பிற்குரிய திரு. ம. பொ. சி அவர்களையே சாரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் நடக்கவில்லை என்று சொன்னார்கள் என்று அன்றைக்கே சொல்லியிருக்கிறார்கள். ஆக 1972ஆம் ஆண்டிலே தங்களை மேலவைத் துணைத் தலைவராக இங்கே உட்கார வைத்த அந்தக் காலக் கட்டத்திலே இந்த அவை தமிழிலே, தமிழுக்குச் சிறப்பம்சம் தந்து முக்கியத்துவம் தரப்பட்டு, நடக்குமென்கின்ற அந்த நிலைக்கு வித்திடப்பட்டுவிட்டது என்பதை நான் மறந்துவிட்டவர்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காகச் சொல்கின்றேன், தாங்கள் இந்த அவையிலே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒன்றைச் சொன்னீர்கள்.