576
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவிலுக்குச் சென்றுகொண்டிருந் தேன். செல்கின்ற வழியில் ஜனாதிபதியிடமிருந்து தொலை பேசிச் செய்தி வந்திருப்பதாகவும், உடனடியாக அவர்களை நான் தொடர்புகொள்ள வேண்டுமென்றும் எனக்கு அறிவிக்கப் பட்டது. சங்கரன்கோவில் செல்கின்ற வழியிலேயே ஓரிடத்திலே காரை நிறுத்தித் தங்கி, அங்கிருந்து தொலைபேசி மூலமாக ஜனாதிபதியிடத்திலே தொடர்புகொண்டு, என்ன என்று அறிந்து கொள்ள விரும்பியபொழுது, ஜனாதிபதியே என்னிடத்திலே பேசினார். அப்போது அவர், முறைப்படி ஒரு மாநிலத்திலே யுள்ள ஒரு முக்கியஸ்தர்களுக்கு இதுபோன்ற பெரிய விருது வழங்கும்போது முதலமைச்சர்களுக்குத் தெரிவிக்கவேண்டு மென்கிற அந்தக் கட்டுப்பாட்டுடன், என்னிடத்திலே தகவலைத் தெரிவித்தார். திரு. சி.எஸ். அவர்களுக்கு இந்த விருதினை வழங்கப்போகிறோம், அதை அறிவிக்க இருக்கிறோம் என்று என்னிடத்திலே தகவலைச் சொன்னார். நானும் பாராட்டி, மகிழ்ந்து, என்னுடைய உள்ளத்தை அவர்களுக்குப் புலப்படுத்தி, மகிழ்ந்து, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவித்து, என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.
அதுமாத்திரமல்ல, சங்கரன்கோவில் சென்றேன். அங்கு நம்முடைய முன்னால் அமைச்சர் திரு.அருணாசலம் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். தேர்தல் பிரச்சாரக் கூட்டம். அந்தக் கூட்டத்திலே திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். நானும் நம்முடைய அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமி அவர்களும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். அந்தக் கூட்டத்திலேயே, நான் பேசத் தொடங்கியவுடனேயே, 'ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை இங்கே குழுமி இருக்கின்ற மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு, திரு.சி.எஸ். அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது கிடைக்கிறது. அதை ஜனாதிபதி அறிவித்தார்கள், வருகின்ற வழியிலே அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது' என்று சொல்லிவிட்டு, 'அவர்களை நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்' என்று குறிப்பிட்டு, 'அவரை' பாராட்டும்முகத்தான் அங்கே அமர்ந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் கையொலி மூலமாக, அவர்