உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

575

சி. சுப்பிரமணியம் அவர்களுக்குப் பாராட்டு விழா

உரை : 81

நாள்: 20.4.1998

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் இங்கே எழுப்பியிருக்கின்ற பிரச்சினை உள்ளபடியே முக்கியமான பிரச்சினைதான். ஆனால், ஒரு தவறான அடிப்படையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து எழுதப்பட்டுள்ள பிரச்சினையாகவே நான் இதைக் கருதுகிறேன். ஏனென்றால் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது அளிக்கப்பட்டதை ஆளுநர் உரையிலே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறோம். ஆளுநர் உரை என்றால் அது முழுக்க, முழுக்க அரசாங்கத்தினுடைய உரைதான். அரசாங்கத்தினுடைய உரை முதலமைச்சரால்தான் தயாரிக்கப்படுகிறது என்பதை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். அந்த அறிக்கையி லேயே, திரு.சி.சுப்பிரமணியம் அவர்களுக்கும், திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கும், விஞ்ஞானி திரு.அப்துல் கலாம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ‘பாரத ரத்னா' விருதுகளுக்காக அரசின் சார்பில் நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவித்து, ஆளுநர் அந்த உரையைப் படிக்கும்பொழுதே அவையிலேயுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுடைய கையொலி மூலமாக அவர்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதுமாத்திரமல்ல, முக்கியமாக ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். தேர்தல் நேரத்திலேதான் சி.எஸ்.அவர்களுக்கு அந்த ‘பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டது. நான் தேர்தல்