உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

591

பொன்னப்ப நாடாருக்கு இரங்கல்

€85

உரை : 85

நாள் : 09.07.1977

கலைஞர். மு. கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே! மாண்புமிகு அவை முன்னவர் அவர்கள் கொண்டு வந்துள்ள இந்த இரங்கல் தீர்மானத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாங்களும் அந்த இரங்கலோடு இணைந்து ஆதரித்து சில வார்த்தைகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மாமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில், குறிப்பாக நிறுவன காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து பணியாற்றிய பண்பாளர் பொன்னப்ப நாடார், அவர்கள், ஒரு உறுப்பினராக மாத்திரம் அவர் இங்கே இல்லை. வளர்ந்து வருகின்ற தலைவர்களுடைய வரிசையில் ஒருவராகத் தன்னை ஆக்கிக் கொள்கின்ற அளவுக்குத் தன்னுடைய தியாகத்தாலும், பழக்க வழக்கங்களாலும், மன இயல்புகளாலும் உயர்ந்தவர் என்ற முறையிலேதான் அவருக்கு இந்த மன்றத்தில் தனியாக ஒரு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்ற கருத்து எதிர்க்கட்சியில் உள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பேறு முதன்முதலாக இந்த மன்றத்திற்குக் கிடைக்கா விட்டாலும், சட்டமன்ற மேலவைக்கு நேற்றைய தினம் கிடைத்தது என்பதை எண்ணி ஓரளவு நான் மன ஆறுதல் பெறுகிறேன். இதைத்தான், முதல்நாள் இரங்கல் தீர்மானங்கள் வருகிற நேரத்தில் பொன்னப்ப நாடார் அவர்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு இரங்கல்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்க் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. சற்றுக் காலதாமத மானாலும் கூட அரசுத் தரப்பில் அவை முன்னவர் அவர்கள் இந்த இரங்கல்தீர்மானத்தை இங்கு முன் மொழிந்தமைக்காக நான் என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டு பல்வேறு அடக்கு முறைகளுக்கு ஆளானவர் மறைந்த பொன்னப்ப நாடார் அவர்கள். அதுமாத்திரமல்ல; அவை முன்னவர் குறிப்பட்டது