உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

போல் தாய்த் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்க வேண்டுமென்ற கடும் போராட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகளையும் ஏற்றுக் கொண்டு நேசமணி அவர் களுடைய தலைமையில் போர்க்களத்திலே நின்ற பெருமைக் குரியவர் பொன்னப்பநாடார் அவர்கள். அதையொட்டி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்திரமல்லாமல், தமிழ்ப் பகுதி எங்கும், தமிழ் வாழ்கின்ற இடம் எங்கும் தன்னுடைய பெயருக்கு ஒரு தனியான இடத்தை உருவாக்கிக் கொண் வராவார்கள். அப்படிப்பட்ட தியாகச் சீலரைப் பெருந் தலைவர் காமராஜர் அவர்கள் தன்னுடைய அன்புக்குரியவராக வும், நம்பிக்கைக்குரியவராகவும் ஆக்கிக் கொண்டதில் எந்த வியப்பும் இருக்க முடியாது.

கன்னியாகுமரி மாவட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மானியங்கள் வழங்க வேண்டுமென்பதிலும் அதே நேரத்திலே அந்த வீரர்களுடைய குடும்பங்களுக்கு விருதுகள் வழங்கவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்து வார்கள். பொன்னப்பநாடார் அவர்கள் இந்த அவையிலே அவ்வாறு கருத்துக்கள் எடுத்துச் சொன்னபோது அவைகளைச் சிறிதும் புறக்கணிக்காது உடனடியாக அன்று இருந்த கழக அரசு நிறைவேற்றித் தந்தது. அவர் மனம் களிக்கின்ற வகையில், ஆனால், இன்றைக்கு அவர் மறைந்திருக்கும் நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலே அந்தப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்குத் தருவதாக வாக்களிக்கப்பட்டு, வழங்கப் பட்டு வந்த மானியங்கள் எல்லாம் அந்த வீரர்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையைக் காண்கிறோம். மறைந்த வருக்கு மரியாதை செலுத்துகின்ற வகையில் அவைகளைத் தொடர்ந்து அந்த வீரர்களுடைய குடும்பங்களுக்கு வழங்கிட அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பொன்னப்ப நாடார் அவர்களுடைய நினைவுக்கு அது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

இந்த அவையில் அவர் ஆற்றிய பணிகளை நேரில் இருந்து அறிந்தவன் நான். எதிர்க்கட்சி வரிசையில் அவரோடு அமர்ந்தும் அறிந்திருக்கிறேன். அவர் எதிர்க்கட்சியிலும், நாங்கள் ஆளும் கட்சியிலும் அமர்ந்திருந்த நேரத்திலும், அவரு டைய பணிகளை அறிந்திருக்கிறேன். எந்தக் கருத்துக்களை