கலைஞரின் சட்டமன்ற உரைகள்
599
விட்டு நான் சொல்கிறேன்” என்று சொல்லி, பெருந்தலைவர் காமராஜரிடத்திலே கலந்து பேசிவிட்டு, நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், மீண்டும் என்னை அழைத்து என்னிடத்திலே சொன்னது : “காமராஜர் சொல்கிறார், இப்போது இந்தியாவிலே, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக்கூடிய இடம் ஒன்றாக, தமிழகம்தான் இருக்கிறது; அதையும் கெடுத்துவிடக் கூடாது என்று கருணாநிதியிடம் சொல் என்று என்னிடத்திலே காமராஜர் சொன்னார்”. இவ்வாறு நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் குறிப்பிட்டார்கள். பிறகு, நானும் மற்ற அமைச்சர்களும் கூடி, பெருந்தலைவர் காமராஜரைச் சந்தித்து அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறோம்.
இங்கே, பெருந்தலைவருடைய படத்தைத் திறக்க வந்தபோது, பேசிய இன்னொரு கருத்தையும், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். நானே, இந்த இரங்கல் தீர்மானத்தில் கூற, அந்தக் கருத்தைத் திரட்டி வைத்திருந்தேன். அவர் முந்திக் கொண்டார் என்றாலும் கூட, அதையும் நான் சொல்வது, பதிய வைப்பது, சிறப்புடையது என்பதற்காக, இங்கே சொல்ல விரும்புகிறேன். அப்போது அவர் பேசினார். அவர் குறிப்பிட்டதைப்போல, தன்னை அழைத்து படத்தைத் திறக்கச் செய்த, என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிக்கூட அதிகம் பேசாமல், அன்றைக்கு அவர் என்னைப் பற்றிப் பேசியதற்குக் காரணம், நெருக்கடி நிலையை, அவரும், நானும், மற்றவர்களும் ஒரே அணியில் இருந்து எதிர்த்தவர்கள். அதற்காக எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த வருத்தமும் படவில்லை. அவருடைய முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதைத்தான் இங்கே குறிப்பிட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு சிறப்புறு அவையாக, அன்றைக்கு இந்த அவை நடைபெற்றது என்பதற்கு அது ஓர் அடையாளம். அப்போது சஞ்சீவ ரெட்டி அவர்கள் குறிப்பிட்டார்கள்; "காமராஜர் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். சாதாரண மனிதராக இருந்தார். அவர் இந்த நாட்டைப் பற்றி மிகவும் கவலை கொண்டிருந்தார். அப்போது நெருக்கடி நிலை இருந்ததால், அவர் சிந்தனை அனைத்தும் நாட்டைப் பற்றியதாகவே இருந்தது. இப்போது யாரும் எதுவும் சொல்லலாம். ஏனென்றால், பதில் சொல்ல காமராஜர் இல்லை. அவர் தனது கடைசி காலத்தில், மகிழ்ச்சி இல்லாமலேயே இருந்து, இறந்தார். அவர் மறைந்தபோது, நெருக்கடி நிலை அமலில் இருந்ததால்,