உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அவர் மறைவுச் செய்தி கேட்டதும், உடனே என்னால் சென்னைக்கு வர முடியவில்லை. சாதாரண சஞ்சீவ ரெட்டிக்கு விமான டிக்கெட் எப்படிக் கிடைக்கும்? இருந்தாலும், கடைசி நேரத்தில் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்தேன். கருணாநிதியும், அவருடைய அரசும் என்னை என்னை விமான நிலையத்திலிருந்து, காமராஜருடைய இறுதி யாத்திரை நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவினார்கள். காமராஜர் இறந்தபிறகு, அனந்தப்பூரில் ஓர் இரங்கற் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் பேச முயன்றேன். கூட்டம் நடத்த அனுமதி தரப்படவில்லை. கைதானாலும் பரவாயில்லை என்று தடையைமீறி கூட்டத்தை நடத்தினேன். அந்த நிகழ்ச்சியும், பேச்சும் பத்திரிகைகளில் வெளிவரவே இல்லை. ஆனால், அதே கூட்டத்தைச் சென்னையில் நடத்தியிருந்தால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனுமதி வழங்கியிருப்பார்; அந்த நிகழ்ச்சியும் பத்திரிகையில் இடம்பெறச் செய்திருப்பார்” என்று உள்ளமுருக அவர் குறிப்பிட்டது பாராட்டுவதற்காக இல்லை; நெருக்கடி நிலைமையினுடைய கொடுமையை எடுத்துக் கூறுவதற்காக.

என்னைப்

எனவே, கடைசிவரையில், அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, நாடு, சமுதாயம், மக்கள் என்கிற அந்த அளவிலேயே அவருடைய சிந்தனை ஓட்டம் இருந்தது. இன்றைக்கு அவருடைய உருவம் நம் முன்னால் இல்லாவிட்டாலும், அவர் உள்ளத்திலேயிருந்து, முகிழ்த்தெழுந்து கிளம்பிய அந்தக் கருத்துக்களெல்லாம் நம்மோடுதான் இருக்கின்றன. அத்தகைய பெரியவரை, மாமனிதரை, இந்தியாவினுடைய ஆறாவது குடியரசுத் தலைவர் என்பதற்காக மாத்திரமல்ல; அவர் தேசத்தியாகி, விடுதலைப் போராட்ட தளபதி என்ற அளவில் நாம் என்றைக்கும் மனதிலே வைத்துப் போற்றுவோம் என்ற உறுதியை இந்த இரங்கல் தீர்மானத்திலே உரையாற்றிய அத்தனை பேருடைய நெஞ்சார்ந்த நினைவோடும் இணைந்து கூறி, அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற உறுதியோடு என் உரையை முடித்து அமைகிறேன்.

18866