உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

செங்கல்வராயன் மறைவுக்கு இரங்கல்

உரை : 94

நாள்: 17.11.1999

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அவை முன்னவர் அவர்கள் இங்கே முன்மொழிந்துள்ள இரங்கல் மற்றும் ஆறுதல் தீர்மானங்களை வழிமொழிந்து சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

அவை முன்னவர் அவர்களுடைய தீர்மானங்களை யொட்டி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மற்றவர்களும், மறைந்தவர்கள்பால் தங்களுக்குள்ள அன்பையும், அவர்களுடைய ளுடைய இழப்பால் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்பட்டுள்ள துன்பத்தையும் விளக்கி இருக்கிறார்கள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் நாடறிந்த பெரியவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் பலரை நாம் இழந்து துன்பக் கடலிலே ஆழ்ந்திருக்கின்றோம். குறிப்பாக, கிருஷ்ணசாமி பாரதி அவர்கள், அவர்களுடைய அகவை 97 என்றாலும்கூட, இன்னும் சில ஆண்டுகாலம் இருந்து நமக்கு அறிவுரைகள் வழங்கவேண்டிய வாய்ப்பை நாம் பறிகொடுத்து விட்டோம் என்று எண்ணித்தான் வருந்த வேண்டியிருக்கின்றது இந்திய நாட்டினுடைய விடுதலைப் போராட்டத்தில் இந்த மண்ணுக்காகப் போராடி, பலமுறை சிறை சென்ற பெருமகன் என்பது மாத்திரமல்ல, இந்த மண்ணின் அனைத்திந்திய ஆட்சி மொழியாக இந்தி மாத்திரமே இருக்கவேண்டும் என்ற ஒரு நிலையை மத்தியிலே காங்கிரசார் எடுத்தபோது, அதை வன்மையாக எதிர்த்து, ஆங்கிலமும் நீடிக்கவேண்டும் என்ற ஒரு பெரு நிலையை எடுத்த பெருமகனார் கிருஷ்ணசாமி பாரதி