உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

623

அவர்கள் ஆவார்கள். அதை தன்னுடைய இறுதிக்காலம் வரையிலே அழுத்தந்திருத்தமாக எடுத்துக்கூறி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய குடும்பமே - இங்கே மாண்புமிகு உறுப்பினர்கள் எடுத்துக்காட்டியதைப் போல - இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தியாகக் குடும்பமாகும். அந்தக் குடும்பத்திலே தோன்றிய அந்தத் தோன்றல் இன்று படமாகி விட்டார். படமானாலும் இந்திய நாட்டினுடைய சுதந்திரத்திற்கு, மொழிப்பற்றுக்கு ஒரு பாடமாக விளங்குகிறார் என்பதை எண்ணி நாம் ஆறுதல் பெறுகின்றோம்.

செங்கல்வராயன் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களோடு சேர்ந்து, இணைந்து பயின்று, நண்பராகப் பழகி, இறுதிவரையிலே அந்த நட்பைப் போற்றி, அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகும், இந்த இயக்கத்திற்கு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரும் தோழனாக

விளங்கினார்கள்.

நான் கேள்விப்பட்டது சரியாக இருக்குமேயானால், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற அந்தக் கட்சி தோன்றியபோது, முதல் உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார் என்பதிலிருந்து, அவர் எந்த அளவிற்கு, அடைந்த சுதந்திரத்தை நல்ல முறையிலே பேணிப் பாதுகாக்கவேண்டும் என்பதிலே நம்பிக்கை வாய்ந்தவராக இருந்தார் என்பதை உணர முடிகின்றது. நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் சந்தானம் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, கடற்கரையிலே நேதாஜியினுடைய சிலையைத் திறந்தபோது, அவருடைய முன்னிலையிலேதான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் அங்கே உரையாற்றும்போது சொன்னார்கள்: 'நேதாஜி அவர்களுடைய சொற்பொழிவை நான் மொழிபெயர்த்திருக் கிறேன்' என்ற பெருமிதத்தை அங்கே எடுத்து விளக்கினார்கள். இறுதிவரையிலே, அவர் மறைகின்ற சில வாரங்களுக்கு முன்பு வரையிலே, அவர்களுடைய குரல் தழுதழுத்ததில்லை. சிங்கத்தின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட பேச்சாற்றல் வாய்ந்தவர், நினைவாற்றல் வாய்ந்தவர். இத்தனைக்கும் மேலாக, நட்போடு பழகக்கூடியவர். அவர்