உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

635

உரையாற்றக்கூடிய திறமை பெற்றவர் மறைந்த அபுல்ஹசன் அவர்கள் ஆவார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் நான் கலந்துகொள்கின்ற பல நிகழ்ச்சிகளில், குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளில் அல்லது பொது நிகழ்ச்சிகளில் அல்லது அரசு நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரும் கலந்துகொண்டு ஆற்றிய உரைகள் எல்லாம் அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற உரைகளாகவும், ஆட்சி செய்கின்ற நற்காரியங்களை மேலும் ஊக்கப்படுத்துகின்ற உரைகளாகவும் அமைந்ததை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது.

இஸ்லாமியச் சமுதாயத்திலே, இனிய இயல்பும், இணையற்ற தொண்டுள்ளமும் கொண்டு வாழ்ந்த ஒரு நல்லவரை, வல்லவரை நாம் இப்போது இழந்திருக்கின்றோம். எனக்கு அவர் எவ்வளவு பெரிய நெருங்கிய நண்பர் என்பதை தஞ்சை மாவட்டத்திலுள்ள எல்லாக் கட்சிகளிலே உள்ளவர்களும் மிக நன்றாக அறிவார்கள்.

நேற்றையதினமே நான் சொன்னேன். தங்களிடமும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடமும், "இன்று காலையிலே எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது, ஆகவே இன்று அவைக்கு நான் தாமதமாக வருவேன், மன்னித்துக்கொள் ளுங்கள்” என்று நேற்றைக்கே நான் தங்கள் அறையிலே கேட்டுக்கொண்டேன். இருந்தாலும்கூட, இந்த நிகழ்ச்சிக்கு, அவருக்கு அனுதாபம் தெரிவிக்கின்ற இந்த நிகழ்ச்சிக்கு நான் வராமல் இருக்கக்கூடாது என்பதற்காக, நான் ஒத்துக்கொண்ட நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் தள்ளிவைத்துவிட்டு வந்தேன். என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அந்த அளவிற்கு என்னுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட அந்த உருவம், இனி இந்த அவையிலே இடம்பெறாது என்பதையும், இந்த அவையிலே இடம் பெறாவிட்டாலும்கூட, என்னுடைய அகத்திலே, உள்ளத்திலே என்றென்றும் இடம்பெறக்கூடிய உருவம் என்பதையும் இங்கே நினைவுபடுத்தி, அவரை இழந்து வாடுகின்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் திரு. மூப்பனார் அவர்களுக்கும், அபுல்ஹசன் அவர்களுடைய குடும்பத்தாருக்கும், உற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் சார்பிலும், தமிழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அமைகின்றேன்.