634
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அபுல்ஹசன் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல்
உரை : 97
நாள் : 20.01.2001
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தின் வழியில் சில கருத்துக்களை கண்ணீரோடு கலந்து கூறிட நின்றுகொண்டிருக் கின்றேன். இந்த அவையினுடைய மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், என்னுடைய நெருங்கிய நண்பரும், பொது வாழ்க்கையிலே நீண்டகால அனுபவம் வாய்ந்தவரும், பொதுமக்களுடைய செல்வாக்கை நிரம்பப் பெற்றவருமான மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அபுல்ஹசன் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற செய்தி பெரும் மனத்துயரத்திற்கு நம்மையெல்லாம் உள்ளாக்கியிருக்கின்றது
அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகள் மாத்திரமல்ல, மயிலாடுதுறையினுடைய நகராட்சி மன்றத் தலைவராக இருந்து ஆற்றிய பணிகளும் என்றென்றும் மறக்க இயலாதவை. அவர்கள் அந்த மன்றத்தினுடைய தலைவராக இருந்து பணியாற்றிய காலத்தில் எல்லாம் ஆட்சிப் பொறுப்பிலேயிருந்த வாய்ப்பு எனக்கு இருந்த காரணத்தினால், அவர்கள் விடுத்த எந்த வேண்டுகோளையும் அலட்சியப் படுத்தாமல், மயிலாடுதுறை நகராட்சிக்குத் தேவையான அத்தனை காரியங்களையும் நான் செய்துகொடுத்தேன் என்பதுதான் அவரை இழந்திருக்கிற நேரத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள கடுகளவு ஆறுதல் என்பதை இங்கே கூற விரும்புகின்றேன்.
அவர்கள் இந்த அவையிலே எத்தனையோ முறை பேசியிருக்கின்றார்கள். எதிர்க்கட்சி வரிசையிலே இருந்து அவர்கள் பேசுகின்றார்கள் என்றாலும்கூட, அவர்களுடைய நியாயமான வாதங்களை எந்தவொரு நேரத்திலும் ஆத்திர வயப்பட்டவராக எடுத்து வைத்தவர் அல்ல. எல்லோரும் சிரிக்கத்தக்க அளவிற்கு, அவரால் யார் தாக்கப்படுகிறார்களோ அவர்களேகூட சேர்ந்து சிரிக்கின்ற அளவிற்கு, அவ்வளவு
லாவகமாக தன்னுடைய பேச்சை அமைத்துக்கொண்டு