உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

637

முப்பதாயிரமாக நீண்டு கொண்டிருக்கிறது. சில ஏடுகளிலே லட்சத்தைத் தாண்டும் இந்தக் கணக்கு என்று செய்திகள் வருவதையும் நாம் காணுகின்றோம்.

மத்திய அரசினால் தேசியப் பேரழிவு என அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களை மீட்பதற்காக நமது நாட்டு இராணுவம் அழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் வேகமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்கிடையிலே சிக்கியுள்ள பிணங்கள் தோண்டி காட்சிகளையும் காயமடைந்தவர்கள் மருந்துவமனைகளிலே சேர்க்கப்பட்டு அவர்கள் துடிக்கின்ற காட்சிகளையும் நாம் T.V - க்களின் மூலமாகக் காணுகிற நேரத்தில் எப்படிப் பதைக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்கிறோம்.

எடுக்கப்படுகின்ற

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துவர மத்திய அரசினுடைய ஏற்பாட்டின் மூலம் 50 விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. காண்ட்லா துறைமுகத்திலே நிர்தேஷக், ஜமுனா ஆகிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் தற்காலிக மருத்துவமனைகளாகவே மாற்றி அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நிவாரணப் பணிகளுக்காக உணவுப் பொருள்களையும், ஆடைகள், கம்பளி, ஜமக்காளம் முதலியவைகளையும் மருந்துப் பொருள்களையும் திரட்டிக் கொண்டு குஜராத் நகரத்தை நோக்கி பல பகுதிகளிலே யிருந்து சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன.

இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து மீட்புப் பணிக்காக பல்வேறு குழுக்கள் வந்துள்ளன. இங்கிலாந்து தீயணைப்புப் படை அதிகாரி கெவின் செல்லியும், ஜெர்மனி குழுத்தலைவர் பி.ஸ்லக் அவர்களும் கடைசி மனிதனை மீட்கும் வரையில் தங்களுடைய பணி தொடருமென்று அறிவித்திருக்கின்றார்கள். சாதி, மத, இனம் கடந்த மனித நேய உணர்வு பீறிட்டு எழுவதன் காரணமாக இந்த நாடுகளிலிருந்தெல்லாம் நவீன கருவிகளோடு மோப்ப