உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நாய்களும் மீட்புக் குழுவினரும் வருகை தந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து அடுத்தடுத்து அதே மாநிலத்தில் நில அதிர்வுகளும் கடந்த 3 நாட்களில் ஏறத்தாழ 288 முறை ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் காணும்பொழுதும், கேட்கும் பொழுதும் மேலும் மேலும் நாம் துடிக்கின்றோம்.

அஃதன்னியில் நேற்றையதினம், 29-1-2001 காலை 8.00 மணி அளவில் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலே தருமபுரி மாவட்டத்திலும் சில பகுதிகளிலே நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெங்களூர், தும்கூர், மாண்டியா, கோலார், மைசூர் மாவட்டங்களில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்திலே ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, உளிமங்கலம், நாகனூர், ராயக்கோட்டை, பெண்ணாகரம் உட்பட பல பகுதிகளிலே இந்த அதிர்ச்சி ஏற்பட்டு 2 வினாடி நீடித்துள்ளது என்றும் இந்த அதிர்ச்சி 4.5 ரிக்டர் அளவு இருந்துள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன.

நில நடுக்கம் காரணமாக பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ மாடி கார்னரில் விரிசம் ஏற்பட்டு உள்ளது. ஓசூர் சுண்ணாம்பு ஜூபி, ஓசூர் தேர்பேட்டை, ராயக்கோட்டை, அட்கோ பகுதிகளிலும் வீடுகளிலே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் காணும்போது இதை முன்கூட்டியே அறியக்கூடிய விஞ்ஞானம் இன்னும் - நம்முடைய நாட்டிலே மாத்திரம் அல்லஉலகத்திலேயே ஏற்படாத

இந்தச் சூழ்நிலையில், ஏற்படக்கூடும் என்கிற ஓரளவு அடையாளங் களையாவது தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க வேண்டியது எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை நம்மால் உணராமல் இருக்க முடியவில்லை. அதைப்பற்றி இந்திய அரசு மாத்திரமல்ல, உலகம் முழுவதும் உள்ள எல்லா அரசுகளும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம் வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

நம்மைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாம் சிந்துகின்ற கண்ணீரோடு, நம்முடைய