உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நேரடியாகச் செய்தார் என்று நான் குறிப்பிடமாட்டேன். இவ்விதம் செய்தால் முதலமைச்சர் அவர்கள் திருப்தியடைவார் கள் என்ற நோக்கத்தோடு சிலர் செய்திருக்கலாம். அவர்கள் அவ்விதம் கருத முதலமைச்சர் அவர்கள் காரணமாக இருந்திருப் பார்களேயானால் அதுவும் முதலமைச்சர் அவர்களைச் சார்ந்த குற்றம் என்பதையே நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். ஆவடியில் திருமால் என்பவர், பி.ஸி. நம்பர் 560, 1-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டு நேபா பகுதிக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். அடுத்து, துரைசாமி, லான்ட்ஸ்நாயக் நம்பர் 819, எஸ்.ஏ.பி.யில் இருந்தவர், எம்.எஸ்.பி.-யில் 3-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டு நேபா பகுதிக்கு அனுப்பப் பட்டிருக்கிறார், அடுத்து மதுரைப்பிள்ளை என்பவர், பி.ஸி. 739, எஸ்.ஏ.பி.-யில் 1-வது பட்டாலியனிலிருந்து எஸ்.ஏ.பி.-க்கு 2-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டு ஒரிசாவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். நேர்மாறாக முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னவர்களில் 49 பேர்களில் 20 பேர்களுக்கு லான்ட்ஸ் நாயக், நாயக், ஹவில்தார் இவ்விதமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதை முதலமைச்சர் அவர்கள் திருப்தி அடைவார் என்ற காரணத்திற்காக யாராவது செய்திருப்பார்களேயானால் அதற்கு காரணமாயிருந்தது முதலமைச்சர் அவர்களுடைய குற்றமா இல்லையா என்பதை கேட்க விரும்புகிறேன். இவ்வளவும் செய்துவிட்டு, நேர்மையான நிர்வாகம் நடக்கிறது என்றால் எப்படி அதை ஒப்புக்கொள்ள முடியும்?

இன்னும், இதே சட்டமன்றத்தில் மொழிப் பிரச்சினையைப் பற்றி பல நேரங்களில் விவாதிக்கிறோம். தமிழ் மொழியை அழிக்கின்ற வகையில் இந்தி மொழி புகுத்தப்படு கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. முன்பு இதைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில் இந்தி என்பது நமக்கு கள்ளிப்பால் போன்றிருக்கிறது என்று நான் சொன்னபோது, பதில் அளித்த நமது முதலமைச்சர் அவர்கள் இந்திமொழி 'கள்ளிப்பால்' அல்ல 'கழுதைப்பால்' என்று குறிப்பிட்டார்கள். இதே முதலமைச்சர் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தபோது, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றில் ஒட்டகப்பால் வழங்கப்