உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

65

பட்டது என்றும், உடம்புக்கு ஒட்டகப்பால் மிகவும் நல்லது என்ற போதிலும், அது எனக்கு பிடிக்கவில்லை என்றும் உபயோகிக்க வில்லை என்றும் அமைச்சர் அவர்கள் ஒரு விருந்தில் சொன்னார்கள். அவ்விதம் உடம்புக்கு நல்லதாக இருந்த ஒட்டகப்பால் பிடிக்காத நேரத்தில், இந்த கழுதைப்பால் மட்டும் எப்படிப் பிடித்தது என்பது தெரியவில்லை. மொழிப் பிரச்சினைக்காக தமிழர்களுடைய உயிர் பறிக்கப்படுகிறது. தமிழர்கள் எல்லாம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்படு கிறார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் எல்லாம் விலங்கிட்டு சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். இது அடக்கு முறை அல்லவா? இது கொடுமை அல்லவா? தமிழ் பாட மொழியாக இருக்கவேண்டும் என்று போராடுகிற தமிழரசுக் கழகம் அடக்குமுறைக்கு ஆளாகிறது. அது கொடுமை அல்லவா? மொழிப்பிரச்சினைக்கு அடுத்ததாக மற்றொரு பிரச்சினையை இறுதியாகக் குறிப்பிட்டுப்பேச விரும்புகிறேன் அதுதான் உணவு நிலைமை. அரிசி வாங்க க்யூ வரிசையில் இன்றைய தினம் ஆண்களும் பெண்களும் நிற்கிற கோரக் காட்சியை ஏற்படுத்தியதற்கு யார் காரணம்? பற்றாக்குறை என்கிறார்களா? இல்லை என்கிறார்கள். பதுக்கல் இருக்கிறதா? இல்லை என்கிறார்கள். சரியாக வினியோகிக்க முடியவில்லை என்கிறார்கள். இந்த நிலைமையில்தான் இன்றையதினம் பல தரப்பட்ட கருத்துக்கள் எடுத்துச்சொல்லப்படுகின்றன. இதற்காக எத்தனை பேர்கள் பலியிடப்பட்டார்கள். மக்கள் க்யூவில் நிற்பதைப்பற்றி அமைச்சர் பூவராகன் அவர்கள் பேசும்போது க்யூவில் நிற்பது நாட்டு முன்னேற்றத்தைக் குறிப்பிடுகிறது என்று குறிப்பிட்டார்கள். அப்படியானால் கோவை மாவட்டத்தில் பில்லூர் அணைக்கட்டில் மக்கள் புகுந்து கொள்ளை அடித்தார்கள் என்றால், அது மக்களுடைய சுதந்திர உணர்ச்சியைக் காட்டுகிறது என்று சொல்லக்கூடும். மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்களே என்று சொன்னால், அது போலீசாருடைய வீரத்தைக் காட்டுகிறது என்று சொல்லக்கூடும். ஆனால் இது எதையும் காட்டவில்லை, உங்களுக்கு வாக்களித்த மக்களுடைய இளிச்சவாய்த்தனத்தைத்தான் காட்டுகிறது உணவுப்

போராட்டதில் ஈடுபட்ட அர்ச்சுனன் கொலை செய்யப்பட்டார். அர்ச்சுனன் என்று சொல்லும்போது நம்முடைய உணவு