கலைஞரின் சட்டமன்ற உரைகள்
என்பதற்கு இப்போதே ஒத்திகைப்
73
பார்த்துக்கொள்ளு கிறார்களோ, என்னவோ நாங்கள் அதையெல்லாம் இன்றைய தினம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறோம்.
ஜனநாயகம் இந்த ஆட்சியிலே பேணிப் பாதுகாக்கப் படவில்லை, கொலைசெய்யப்படுகிறது என்பதற்கு, அருப்புக் கோட்டை, நெல்லை நகர மன்றங்கள் கலைக்கப்பட்டதை மன்றத்திலே பேசிய தலைவரும், மற்றவர்களும் வெகு விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் முன் இருக்கின்ற காரணத்தால், நெல்லை, அருப்புக் கோட்டை பற்றிய விவரங்களுக்கு நான் சொல்ல விரும்பவில்லை. தலைவர் அவர்கள், இங்கே வேறு பல நகரசபைகளைப் பற்றிப் பல எடுத்துக்காட்டுகளையெல்லாம் இங்கே குறிப்பிட்டார்கள். மேற்கொண்டு பல விவரங்களை அந்த நகரசபைகளைப்பற்றி இந்த மன்றத்தின் முன் வைத்து, ஜனநாயகம் நெல்லை நகர மன்றத்தைப் பொறுத்தும், அருப்புக்கோட்டை நகர மன்றத்தைப் பொறுத்தும் செயல்படுத்தப்பட்டிருக்கிறதே, அதுதான் எங்களுடைய ஜனநாயகப் பணி என்று அமைச்சரவை கூறுமேயானால், அந்த ஜனநாயகப் பாணி நான் இங்கே எடுத்துக் காட்டுகின்ற இந்த நகரமன்றங்களைப் பொறுத்தவரையில் ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை இங்கே நான் வெகு தாழ்மையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இராணிப்பேட்டை நகர சபையை எடுத்துக் கொள்ளுவோம். அதில் ஒரு காண்ட்ராக்ட் விடப்பட்டது. பொதுவாக, ரூ 1,500 க்கு மேற்பட்ட காண்டிராக்டர்கள் எல்லாவற்றிற்கும் டென்டர் மூலம் விடப்படவேண்டும், ஸீல் போட்ட டென்டர்கள் தருவிக்கப்பட வேண்டும். 12,000 ரூபாய் காண்டிராக்ட், இந்த 12,000 ரூபாய் காண்டிராக்ட் ஒருவருக்கே தரப்பட்டிருக்கிறது. அப்படி ஒருவருக்கே தந்தால், சந்தேகப் படுவார்கள் அல்லவா? ஸீல் போட்ட டென்டர்கள் கொடுக்க வேண்டும் என்றால், வேறு பலரும் அந்தக் காண்டிராக்டுக்குப் போட்டா போட்டியாக வரக்கூடும் என்ற பயத்தின் காரணமாக, ஒரே ஆளுக்கு ஒரே கட்டடத்தை பல பகுதிகளாகப் பிரித்து கொடுத்தார்கள். டீ கடைக்கு ரூ. 1,750. அதே கட்டடத்தில் இன்னொரு டீ கடை கட்ட ரூ. 1,750: அதே கட்டடத்தில்