74
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இன்னொரு டீ கடை கட்ட ரூ. 1,500. இன்னொரு டீ கடை கட்ட ரூ. 1,500; இன்னொரு கடை கட்ட 1,500; அதே கட்டடத்தில் ஸ்டால்கள் கட்ட ரூ. 750 இரண்டு ஓட்டல்கள் கட்ட ரூ. 1,750; இரண்டு ஸ்டால்கள் கட்ட ரூ. 1,500; என்ற முறையில் இப்படி மாற்றப்பட்டு, வகாகான் என்ற காண்டிராக்டருக்கு ஏறத்தாழ ரூ.12,000-க்கு காண்டிராக்ட் விடப்பட்டிருக்கிறது. இப்படிப் பட்ட பல மோசடிகள் இராணிப்பேட்டை நகரமன்றத்தில் நடைபெற்றன என்ற காரணத்திற்காக, ஆறு நகரமன்ற உறுப்பினர்கள் கூடி 28-12-1964 அன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு அதை அனுப்பியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானம் எழுதப்பட்ட மினிட் புக் அங்கே கிழித்து எறியப்பட்டது. அது சம்பந்தமாக சர்க்காருக்கு அந்த ஆறு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கடிதம் எழுதினார்கள். சர்க்காரிடமிருந்து கமிஷனருக்கு விளக்கம் கேட்டு கடிதம் போயிற்று. அதற்குக் கமிஷனர் எழுதினார். 15-ந் தேதி அன்று, 28-ம் தேதிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர்கள் கேட்ட விஷயம் மினிட் புக்கிலே இருக்கிறது. பிறகு 30-ந் தேதியன்று, அதுபற்றி பிரச்சினை சபையிலே பேசப்பட்டிருக்கிறது. "இவ்வளவும் சொல்லிவிட்டு, நான் மொத்தமாகச் சொல்லுகிறேன் நான் அந்தச் சபையிலே நுழைகிற நேரத்தில் அந்த நகரசபை ‘பெல்மல் கண்டிஷன்' இல், அதாவது மிகக்குழப்பமான நிலையில் இருந்தது' என்று கமிஷனர் அவர்கள் சர்க்காருக்குப் பதில் எழுதியிருக்கிறார். 10-5-1965 அன்று அந்தப் பதில் எழுதப்பட்டிருக்கிறது. "நான் நுழைகிற நேரத்தில் அந்த நகரசபை குழப்பமான நிலையில் இருந்தது" என்று கமிஷனர் எழுதியிருக் கிறார்கள். அப்படிப்பட்ட மோசடிகள் நடைபெற்ற பிறகும், இந்த ஜனநாயகப் பாணி ஏன் இராணிப்பேட்டை நகராட்சி மன்றத்தை தொடவில்லை? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
நேற்றையதினம் கனம் உறுப்பினர் திருமதி குழந்தை யம்மாள் பேசுகிற நேரத்தில், "திருநெல்வேலி நகரசபை உறுப்பினர்களுக்குச் சொல் புத்தியும் கிடையாது, சொந்த புத்தியும் கிடையாது" என்று சொன்னார்கள். 'சொற்புத்தியும் கிடையாது, சொந்த புத்தியும் கிடையாது' என்று சொன்னபிறகு, வேறு எங்கெங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்தேன்.