உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

85

கண்ணப்பன், அவர்களைப் பப்ளிக் சர்வீஸ் கமிஷனைக் கேட்காமல்கூட நேரடியாகவே நியமனம் செய்திருக்கிறார்கள். அவர் இப்பொழுதும் காங்கிரஸ் உறுப்பினர்தான். அரசியல், கல்வி ஸ்தாபனங்களுக்குள் நுழையக்கூடாது என்ற முதலமைச்சர் அவர்களுடைய வாதம் இந்த நியமனத்தின் மூலம் பொடிப்பொடியாக்கப்பட்டுவிட்டது

மந்திரிகள் எதையும் செய்யலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறவிரும்புகிறேன். எதையும் செய்யலாம் என்ற அந்தக் காரியத்தில்கூட அமைச்சர்களுக்குள்ளே ஒற்றுமை கிடையாது. கவர்ன்மெண்ட் பிரஸ்களை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் வைக்க வேண்டுமென்றிருந்தது. ஆனால் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதை சென்னை, திருச்சி என்ற அளவோடு நிறுத்திக் கொண்டார்கள். தென் ஆற்காட்டிற்கு ஒரு அரசாங்க அச்சகம் நிறுவப்படுகிறது. தென் ஆற்காடு என்றால் கடலூரில்தான் நிறுவப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அந்த ஊர் மந்திரியினுடைய ஊர் அல்லவே, அந்தப் பாவத்தைச் செய்ய வில்லையே, ஆகவே விருத்தாசலம் என்ற பெரிய நகரத்தில் நிறுவுகிறார்கள். பத்து, பதினைந்து லட்சம் ரூபாய் செலவிடப் பட்டுக் கட்டப்படுகின்ற பெரிய நிறுவனம் அது. ஏற்கனவே அங்கே இருக்கிற ஓட்டை உடைசல் பிரஸ்களுக்குக்கூட இப்பொழுது வேலை கிடைக்கவில்லை. திரு. பூவராகன் கெட்டிக்காரர், ஆகையால் முதலமைச்சர் அவர்களைக் கொண்டே 'நீங்களே திறந்துவையுங்கள்' என்று

சொல்லியிருக்கிறார்....

கனம் திரு. கோ. பூவராகன் : பதினைந்து, பதினாறு லட்சம் செலவில்லை. ஏற்கனவே பட்ஜெட்டில் மூன்று இடங்களில் வைக்க வேண்டுமென்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. சேலத்திலே ஒன்றும், திருச்சியிலே ஒன்றும், தென் ஆற்காடு ஜில்லாவில் ஒன்றும் வைக்கப்பட்டது. சென்னையில் மவுண்ட்ரோடிலே மொத்தமாக இருந்த அச்சகத்தைப் பிரிந்து 4, 5 இடங்களிலே வைக்கவேண்டுமென்று இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையிலேதான் அவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.