உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கலைஞர் மு. கருணாநிதி : ஆகவேதான் பத்து லட்சமோ, பதினைந்து லட்சமோ என்று குறிப்பாகச் சொன்னேன். திருச்சி மாவட்டத்திலே திருச்சியிலே வைக்கப்பட்டிருக்கிறது; சேலம் மாவட்டத்திலே சேலத்திலே வைக்கப்பட்டிருக்கிறது; தென்னாற்காடு மாவட்டத்திலே விருத்தாசலத்திலே வைக்கப் படுவானேன் என்பதுதான் என்னுடைய கேள்வியே தவிர, வேறு அல்ல. அந்தப் பிரஸ்ஸை வைப்பதற்கு ஒதுக்கிய இடம் இருக்கிறதே அது, தேர்தலிலே மிகவும் பயன்படக்கூடிய ஒருவரிடம் இருந்து, அந்த இடத்தைத் தேர்ந்தேடுத்து இப்போதே அச்சாரமாக அந்த இடத்தை அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். இதைச் சொல்வதற்குக் காரணம் அதிகாரம் இந்த வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான்.

ஸ்டேட் கோவாப்ரேட்டிவ் பாங்குக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் மொத்தம் 15 டைரக்டர்கள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். இதிலே 13 பேர் 11 மாவட்டங்களில் இருந்து 10,000 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்டேட் கோவாப்பரேடிவ் பாங்கு டைரக்டர்களாக வருகிறார்கள். மிச்சம் இரண்டு பேர்கள் பதின்மூன்று பேரைப் பத்தாயிரம் பேர் தேர்ந்தெடுக்க வேண்டும்; அதே சமயத்தில் மிச்சமிருக்கும் இரண்டு உறுப்பினர்கள் 109 தனிப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படி 10,000 பேரால் 13 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிற அதே நேரத்தில் 109 பேரால் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது முறையல்ல என்று கருதி, கூட்டுறவு ரிஜிஸ்ட்ரார் அவர்கள் ஒரு உத்தரவு போட்டார். வழக்கமாக இருக்கின்ற அந்த இரண்டு பிரதிநிதிகளிலே ஒருவர் காங்கிரஸ்காரர்; இன்னொருவர் முக்கால் காங்கிரஸ்காரர், திரு. காமராஜர் அவர்களுடைய நிழலாக இருப்பவர். இந்த இரண்டு பேர்களுந்தான் அந்த இரண்டு இடத்திற்கு வரப் போகிறார்கள். ரிஜிஸ்ட்ரார் அவர்கள் உத்தரவு வந்ததும் அந்த இரண்டு பேரும் யாரைப் போய்ப் பார்த்தார்களோ, யார் யாரைக் கேட்டார்களோ தெரியவில்லை. கூட்டுறவு ரிஜிஸ்ட்ரார் நவம்பரில் உத்தரவு போடுகிறார். டிசம்பரில் அதே உத்தரவு திரும்பப் பெறப்பட்டு 'இல்லை, இல்லை இரண்டு பேர்கள்