உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

97

செல்வதற்குள்ளாக சகிக்க முடியாத சில கொடுமைகள் அங்கு நடைபெற்று முடிந்துவிட்டன. அந்தக் கொடுமைகள் நடந்து முடிந்து விட்டதும் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியதா என்றால் இல்லை. அதில் இரண்டு தரப் பிலும், மிராசுதார்கள் தரப்பிலும், விவசாயத் தொழிலாளர்கள் தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டு, அவர்களில் ஏறத்தாழ இரு தரப்பிலும் 46 அல்லது 48 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக் கிறார்கள். அதில் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் முதல் எதிரியாக, அந்தக் குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில் முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டு, அவர்கள்மீது வழக்கு தொடரப் பட்டிருக்கிறது. அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பதை இந்த நேரத்தில் இங்கு விவாதத்திற்கு எடுத்துவைக்க நான் விரும்பவில்லை. அது தஞ்சை மாவட்ட மக்களுக்குத் தெரியும். இந்தக் கண்டனத் தீர்மானம் எந்த அரசியல் நோக்கோடு கொண்டுவரப்பட்டிருக்கிறதோ அதேபோல், அதேபோல், அரசியல் நோக்கோடு அவர் யார் என்று இங்கு கூறி அந்த அரசியல் லாபத்தைச் சம்பாதிக்க நிச்சயமாக நான் எண்ணவில்லை. அவர் யார், எப்படிப்பட்டவர், எந்த நிலையில் உள்ளவர் என்பதை யெல்லாம் நிச்சயமாகத் தஞ்சையில் உள்ளவர்கள் அறிவார்கள். ஆக, கண்டனத் தீர்மானத்தைக் கொடுத்துள்ள காங்கிரஸ் தரப்பினர் அவர்களை அறியாமலேயே அந்தக் கொடுமையைச் செய்த பாவிகளை கண்டிக்கிறார்களே என்று எண்ணி எண்ணி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். (ஆரவாரம்.)

தீ வைப்பு சம்பவம் என்பது சாதாரணமானதல்ல. நாங்கள் நேரில் பார்த்தோம். எவ்வளவு பயங்கரமான கொடுமை என்பதை நாங்கள் கண்ணீர் வடிய வடியப் பார்த்தோம். ஒரு சிறிய வீட்டிற்குள்ளாக, அதிலும் அடுக்களை என்று அவர்கள் கட்டிய பகுதியிருக்கிறதே அதற்குள்ளாக நாற்பதுக்கு மேற் பட்டவர்கள், தாய்மார்களும், குழந்தைகளும் உட்பட, திரு.ஞானசம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டதுபோல் ஒரு குழந்தை தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிற குழந்தையின்