உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

எலும்புக்கூடும், தாயின் எலும்புக்கூடும் கருகிக் கிடக்கிற அந்தக் கோரக் காட்சிகளையெல்லாம் நாங்கள் பார்த்தோம். இதிலிருந்து என்ன புரிகிறது? சமுதாயத்திலே நாம் எந்த அளவிற்கு மிருக உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம், வெறித்தனங்களையெல்லாம் எந்த அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.

ஆறு மணி அளவில் பக்கிரி என்ற ஒரு குடியானவ நண்பர் அங்குப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். உடனடி யாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது போலீசும், சட்டமும், ஆனால், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசுக்கு அவகாசம் தராமல், சட்டத்திற்கு இடம் தராமல், சிலர் கூடிக் கொண்டு, சில மிராசுதாரர்கள் கூடிக்கொண்டு அப்போதே தீர்ப் பளி௦ப்பது என்று கையில் கொள்ளிக்கட்டைகளையும் துப்பாக்கி ரவைகளையும் வைத்துக் கொண்டு மிரட்டினார்கள் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து பத்தாண்டுகளுக்குப் பின்னால் என்னோடு வாருங்கள். அது பயங்கர ஆண்டு அல்ல. பின்னால் வந்தால் நீங்கள் ஆளும் கட்சியில் இருப்பீர்கள். ஆகவே நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கக்கூடிய ஆண்டுதான் 1957-ம் ஆண்டில், முதுகுளத்தூரில், இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உங்கள் ஞாபகத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதே மாமன்றத்தில் அன்றையதினம் போலீஸ் அமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையில் என்ன சொன்னார்கள்?

1957 ஜுலை 4-ம் தேதி முடிவுற்ற உபதேர்தலின் காரணமாக அந்தப் பிரதேசத்தில் பகை எழுந்தது. தேவர் மக்கள் அரிஜன மக்களில் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேவர் மக்களை தோற்கடித்து விட்டனர் என்ற எண்ணத்தில் பகை ஏற்பட்டது. இதன் காரணமாக தேவர்களில் பலர் அரிஜன மக்களைத் தாக்கினர். அரிஜன மக்கள் அதிகமாக இருந்த இடத்தில் அரிஜனங்களும் தேவர்களைத் தாக்கினர்.