பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிவுரை இயல்-இசை நாடகம், என்று தமிழுக்கு இலக்கணம் கண்ட அக்காலம் முதற்கொண்டே தமிழர் வாழ்வில், இசைக் கலைஎத்தகைய ஏற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். பஞ்சமரபு போன்ற பழந்தமிழ் இசைஇலக்கண நூல் களும், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களும் இதற்குச் சான்ருகத் திகழ்கின்றன. இடைக்காலத்தில் தோன்றிய, திருவாசகம், தேவாரம் திவ்யப் பிரபந்தங்கள் போன்ற நூல்களின் ஆசிரியர்களும், பிற்காலத்தில் வந்த அருணகிரியார், அண்ணுமலைரெட்டியார், அருணசலக்கவி, கோபாலகிருஷ்ண பாரதி, வேதநாயகர் போன்ற மேதைகளும், அண்மைக் காலத்தில், சங்கீத கலாநிதி பாபசைம் சிவன் அவர்களும், மற்றும் பலரும், தமிழ்இசைப் பாடற்கலைக்கு வளம் சேர்த்தனர். ஆயினும்; தமிழகத்தின் இசை மேடைகளில்-வானெலியில்-தொலைக்காட்சியில்திரைப்படத்துறையில்-தரமான தமிழ்ப் பாடல்களுக்குப் பஞ்சம்! தமிழன் சுரணையற்றுக் கிடக்கிருன்! அதல்ைதான், இன்று புதுக்கவிதைப் போலிகள் கூடப் பேயாட்டம் போடு கின்றனர். இந்த நிலையில்தான் 'அருட்பா இசையமுதம்' என்னும் திருவருட்பிரகாச வள்ளலாரின் விருத்தப் பண்களெல்லாம் இசைவடிவம் பெற்றுப் புதுப்பொலிவோடு உலா வரு கின்றது, சாகாக் கலை பயின்ற வள்ளற் பெருமானின் பனுவல் கள் என்றென்றும் நின்று நிலைத்துத் தமிழிசைக்கலைக்கு வளம் சேர்க்கும் என்பது உறுதி.