பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் உரை அருள் மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் 'உலகம் பலவிதம்' உலகு அம்பல விதம் எனப் பொருள் படும், அகில உலகங்களும் அம்பல வாணரின் அருளால் நடை பெறுகின்றன. அம்பல வாணரின் அருள் பெற்ற பரமஞானி இராமலிங்க அடிகளார், இவர் "சிதம்பரம் இராமலிங்கம்' என்றே கையெழுத்திடுவார். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் 19ம் நூற்ருண்டில் வந்த தனிப்பெருந் தவஞானி வள்ளல் பெரு மானர். இவர் அருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தவர் ஆதலின், வள்ளலார் எனப் பெயர் பெற்ருர். இவருடைய பாடல் கல்லேக் கரைய வைக்கும், இரும்பையும் இளகவைக்கும். இசை உலகில் திசை புகழுமாறு நிறை மதிபோல் விளங்கு பவர் குருவாயூர் பொன்னம்மாள், சிறந்த இசை மேதை, கன்னலும் கனியமுதும் நாண இன்னிசை பாடும் கலையரசி, பிரான்ஸ், இலண்டன், போன்ற மேலை நாடுகளுக்கும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளுக்கும் பலமுறை சென்று, இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்து பெரும்புகழ் பெற்றவர். அன்பு நெறியில் நின்றவர். இத்தகு வித்தகராய குருவாயூர் அம்மையார், பலகால மாக திருவருட்பாவுக்குப் - பாடலின் பொருளுக்கேற்ப இராகங்களையும் தாளங்களையும் அமைத்து இசையரங்குகளில்