13
சாத்திரக் குப்பையிலே புரளாதீர் என்றுரைத்தாரே அவர், இவர் புரளாது விட்டனரோ!
இல்லை!
வேதாகமங்கள் சூதான மொழிகள் என எச்சரித்தாரே அடிகள், பக்தர்கள் விடுத்தனரோ அவைகளை?
இல்லை!
நால்வருணம் கூடாது என்று நவின்றாரே அவர், இவர் அதனை நீக்கினரோ?
இல்லை!
மருட்சாதி சமயங்கள் முதலியனவற்றை குழிக்கொட்டி மண் மூடிப்போட்டு விடுங்கள் என்று கூறினாரே, அது செய்தனரோ?
இல்லை!
வேறு என் செய்தனர்? விழா கொண்டாடினர், விளக்கேற்றினர், வீதிவலம் வந்தனர். தனித்தனி முக்கனி பிழிந்தனர்! பக்குவம் செய்து பருகினர்.
வாழையும் கத்தரிப் பிஞ்சும் முருங்கையும் பிறவும் நறுக்கிக் கொட்டிச் சமைத்தனர், காய்கறிக் குழம்பெலாம் கடுக ஒழிக என்று கூறி உண்டனர். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை என்று மூழ்கினர், அருட்பா படித்தனர், அயர்ந்தனர், துயின்றனர்?
ஜாதியும் போலிச் சமயமும் நால்வருணமும் அதன் ஆச்சார அனுஷ்டானங்களும், சாத்திரமும், வேதமும்,