உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருட்பெருஞ்ஜோதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

களிலே கோத்திரச்‌ சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்‌” “சாத்திரங்கள்‌ எல்‌லாம்‌ தடுமாற்றம்‌ சொல்வதன்றி நேத்திரங்கள்‌ போற்‌காட்ட நேராவே”.

“வேதாகமங்கள்‌ என்று வீண்வாதம்‌ ஆடுகின்‌றீர், வேதாகமத்தின்‌ விளைவறியீர்‌, சூதாகச்‌ சொன்னதலால்‌ உண்மை வெளி தோன்ற உரைத்தல் இலை, என்ன பயனோ இவை” என்று கேட்டு “இருட்சாதித்‌ தத்துவச்‌ சாத்திரக்‌ குப்பை இருவாய்ப்புப்‌ புன்‌ செயில் எருவாக்கிப்‌ போட்டு, மருட்சாதி சமயங்கள்‌ மதங்கள்‌ ஆச்‌சிரம் வழக்கம்‌ எலாம்‌ குழிக்கொட்டி மண்மூடிப்‌ போட்டு” விடுங்கள்‌, ஏனெனில்‌ “நால்வருணம்‌ ஆச்‌சிரம் ஆசாரம்‌ முதலாம்‌ நவின்ற கலைச்சரிதம்‌ எலாம்‌ பிள்ளை விளையாட்டே” யாகும்‌, நானும்‌ “சாதியும்‌ மதமும்‌ சமயமும் தவிர்த்தேனே சாத்திரக்‌ குப்பையும்‌ தணந்தேன்‌” என்று தமது அனுபவத்தையும்‌ எடுத்து கூறி “கண்மூடி வழக்கமெலாம்‌ மண்மூடிப்‌ போக”

என்றுமுரைத்து சமரச சன்மார்க்க நெறிக்கு வருக என்று இராமலிங்கனார்‌ மக்களை அழைத்தார்‌.

அந்த அழைப்புக்‌ கேட்டு அகங்குழைந்த அன்பர்‌கள்‌ என்‌ செய்கின்றனர்‌. வீடு மெழுகி விளக்‌கேற்‌றி, ஏடு திருப்பி இரைந்து கூவி, ஏதேதோ விளையாட்டு விளையாடி விழாக்‌ கொண்டாடுகின்றனர்‌.

சாதி மத பேதம்‌ பித்துப்பிள்ளை விளையாட்டு என்‌றார்‌ அவர்‌. இவர்‌ அந்த பித்தம்‌ போக்கினரோ?

இல்லை!