உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருட்பெருஞ்ஜோதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பாடிப்‌ பொருள்‌ கூறிப்‌ பரவசமடைவதா? அன்றி அக்‌கருத்துகளின்படி நடப்பதுமா? நடத்துவிப்பதுமா? எது தேவை? எது விழா? எது செய்ய வேண்டும்‌ என்றே கேட்கிறோம்‌ இராமலிங்கரின்‌ பக்தர்களை.

யாருக்கு எதை, ஏன்‌, எவ்விதத்திலே அவர்‌ உரைத்‌தார்‌ எண்பதை எண்ணிப்‌ பார்க்க வேண்டுகிறோம்‌.


பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்
         பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்
         கள் பல பேதமுற்று அங்குமிங்கும்
போறுற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
         போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி
        மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்

ஏருற்ற சுகநிலை யடைந்திடப் புரிதி நீ
        என்பிள்ளை யாத லாலே
இவ்வேலை புரிக வென் றிட்டனம் மனத்தில்வே
       றெண்ணற்க என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
       நிறைந்திரு ளகற்றும் ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரை யோங்கும்
       நீதி நடராஜ பதியே .

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
          சாத்திரச்‌ சந்தடிகளிலே கோத்திரச்‌ சண்டை
யிலே, ஆதியிலே யபிமானித்‌ தலைகின்ற வுலகீர்‌
          அலைந்தலைந்து வீணேநீ ரழிதலழகலவே