8
களிப்பரேயன்றி, விழாவும் வேடிக்கையும் வெட்டிப் பேச்சும் வீண் கூத்தும் செய்துவரின், மகிழார், மனம் மிகவாடி, ‘மதியிலீர் உமக்கோ நான் அருட்பா தந்தேன் ஆடல் பாடலுக்கும், ஆர்பாட்டத்துக்கும் இஃதோ நாள்? இதுவோ, நீவிர் எனை அறிந்ததன் அழகு’ என்று கூறுவார் என்பது திண்ணம். தான் திறம்பட இரவு பகலாக உழைத்து வரைந்ததோர் சித்திரத்தை சிறுகுழந்தை சிறுசிறு துண்டுகளாகக் கிழிக்கக் கண்டால், சித்திரக்காரன் அது தன்னைச் சித்திரவதை செய்வதென்றே ௧ருதிக் கலங்குவான்.
அதுபோன்றே தோற்றுகிறது, இராமலிங்கர் விழாவை ரசம்பட நடத்திவிட்டு, சமூகத்திலே அந்த ரசம் புக மார்க்கம் செய்யாது விடுத்து சீர்திருத்தச்செய ஊருக்கும் ஊக்கமோ உதவியோ தராமலுமிருக்கும் “உத்தமர்களைக்” கண்டால் !
எற்றுக்கு இவர்கள் இராமலிங்க அடிகளைப் போற்றுகின்றனர்? மோட்சலோகக் கதவின் சாவியை அவர் தந்துவிடுவார் என்றா, அன்றி மோசமான ௧ருத்துக்களை மதத்தின் பேரால் மக்களிடை புகுத்திக் கெடுத்த மந்தமதியீனர்களைக் கடிந்துரைத்து, “இதோ இது தீது, இது மோசம், இது தவறு” என எடுத்துக் காட்டி, சன்மார்க்கம் வகுத்துக் காட்டினார், என்பதனுக்கா! தோலுக்கா, சுளைக்கா? சக்கைக்கா ? நரம்புக்கா ? அது இசைக்கும் தொனிக்கா? எதில் ஐயன்மீர் உமது நாட்டம் செல்லவேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி என்பதனுக்கு ஆயிரம் காண்டில் விளக்கு போட்டு அழகு காண்பது என்றா பொருள். அருட்பாவின் அழகினை உணர்தல் எனின் அதனைப்