உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருட்பெருஞ்ஜோதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஆனால்‌, ‘பக்தர்கள்‌’ செய்யும்‌ விழாவினுக்கும்‌, அவர் தம்‌ மற்றை நாள்‌ செயலுக்கும்‌ உள்ள பேதம்‌, எத்துணை என்பதைத்தான்‌ நாம்‌ கண்டு மனம்‌ நோகிறோம்‌. விழா, நாளன்று அருட்பாவும்‌ மற்றைய நாட்களிலே மருட்பாவுமாகவன்றோ பக்தகோடி உள்ளனர்‌. அருட்‌பெருஞ்ஜோதி ஓர்‌ நாள்‌ தோன்றி மறைந்ததும்‌ மறுகணம்‌ இருண்ட இடத்திலேயே தானே இராமலிங்கரின்‌ இணையடி தொழுபவர்‌ தாமும்‌ புகுந்து மற்றையோர் புகவும்‌ கண்டு வாழ்கின்றனர்‌, இஃதா அருட்பா அருளிய அண்ணலுக்கு அவர்‌ அடியார்கள்‌ காட்டும்‌ நன்றி

வேடம்‌ கலைமின்‌! வீணாட்டம்‌ தவிர்மின்‌! விரைந்து சென்று உலகினுக்கும்‌ உள்ளத்துக்கும்‌ உரைமின் உத்‌தமர்‌ இராமலிங்கர்‌ உரைத்தவற்றுள்‌ உள்ள சத்துள்ள பொருளை எல்லாம்‌ சகலரும்‌ உணரட்டும் என்றுதான்‌, நாம்‌ யோசனை கூறுகிறோம்‌.

இராமலிங்க அடிகளார்‌ தமது சொல்மூலம்‌ உலனுக்கு உரைத்துள்ள உண்மைகளை உலகினுக்கு எடுத்‌துரைத்து அவை காட்டும்‌ வழி செல்லும்படி மக்களை நடாத்துவதை விட அவருக்கு ‘பக்தர்கள்‌’ செய்யக்‌ கூடிய, செய்யவேண்டிய நன்‌றி வேறொன்றுமில்லை.

தான்‌ பெற்ற மகவு தவழ்ந்து விளையாடி மழலை மொழி புகன்று, தன்‌ முன்‌ விளையாடுதல கண்டு தாய்‌ இன்புறுதல்‌ போலவும்‌, தான்‌ ஆளும்‌ நாடு தக்கோர் நாடாகி, பஞ்சமும்‌ பிணியும்‌ நீங்கி பாலும்‌ தேனும் பருகினோர்போல, மக்கள்‌ இன்ப வாழ்வு வாழக்காணும்‌ கொற்றவன்‌ களித்தல்‌ போலவும்‌, தாம்‌ உரைத்தமொழி கேட்டு அதன்வழி நின்று, மற்றையோரையும்‌ நிற்க வைக்கும்‌ ‘நோன்பு’ கொண்டோரைக்‌ கண்டே அடிகள்‌