பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 அருணகிரிநாதர் (viii) சினத்தவர் முடிக்கும் ' என்னும் 263-ஆம் பாடல் திருப்புகழின் (அணுக்குண்டுக்கு மேலான) பேராற். றலை விளக்குவதாம். நினைத்த காரியம் அநுகூலமாகி ஒரு காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்று விரும்பில்ை இப்பாடற் பாராயணம் அதற்குச் சிறந்ததொரு தந்திரப் பாடலாகும். ஆகவே இது ஒரு 'வீரஜயத் திருப்புகழாம்'; மேலும், திருப்புகழில் மெய்யான பத்தியுள்ள உண்மை அடி யார்களுக்கு இடர் செய்வோருக்குத் திருப்புகழே நெருப்பாய் அழிவு கூட்டி வைக்கும் என்பதும் இப்பாடலால் தெளிவுறத் தெரிகின்றது. இதனைச் சொலற்கரிய திருப்புகழை உரைத் தவரை அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும், அறத்தை நிலை காணும்” என்னும் வேல்வகுப்பும் வலியுறுத் தும்; பின்னும், சினத்தவர் முடிக்கும்’ என்னும் பதிகத்தில் முதல் நான்கடியில் அடிய ரல்லாதார்க்குத் தழலாகவும் உண்மை அடியார்க்கு நிழலாகவும் திருப்புகழ் உதவு: மென்று சொன்னதற்கு ஆதாரமாகப் பின் நாலடியில்-அடி யரல்லாத சூரர்கள் எரிபட்டழிந்ததும், மெய்யடிமை பூண்ட வள்ளியம்மை சுகப்பட்டு வாழ்வதும் எடுத்துக்காட்டப் பட் டன. இந்தப்பாடல் இவ்வாறு திருப்புகழின் பிரபாவத் தைக் காரணம் காட்டி விளக்கும் பெருமை வாய்ந்துள தாத லால் முருகன் அடியார்கள் திருப்புகழ்ப் பாராயணத்தின் பொழுது (வள்ளியம்மைபோல) அசைவற்ற உண்மைப் பத்தியைச் செலுத்தி, ஒழுக்கந் தவருது துதிக்கவேண்டும் என்பதும், அங்ங்னம் திருப்புகழ்ப் பாராயண நியமங்கொண் டவர்களுக்கு அருள் கூடும், பகை ஒழியும், சகல சித்தியுங் கைகூடும் என்பது சத்தியம் என்பதும் நன்கு புலப்படுத்தப் படுகின்றன. 21. வெள்ளி கர முதல் பூரீ சைலம் வரையில் (4 தலங்கள் : 190-193) இங்ங்னம் தணிகையிற் பன்ளிைருந்த பின்னர் ஒரு நாள் தணி கை நாயகா ! நீ திருவடி தீகூைடி செய்த | Ph. பேரருளைக் கனவிலும் மறவேன் நனவிலும் மறவேன்.'