பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160 அருணகிரிநாதர் 'ஆடக விசித்ர 凸五齿T கோபுர முகப்பிலரு ணு புரியில் நிற்கும் அடையாளக் கார'ன். (வேளை 5 வகுப்பு) செய்யுள் 4 : ('ஒர ஒட்டார்); உனதாள் சேர ஒட்டார் ஐவர் செய்வதென் யான்? இது ஜம்புலன்களின் சேட்டை டையைக் கூறும் - இக்கருத்தை 'ஐவரை அகத்தே வைத்திர் அவர்களே வலியர் சாலச் செய்வதொன் றறிய மாட்டேன்’-அப்பர் திருப்புகலூர் 'காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்ற லொட்டார் சம்பந்தர்-வலிவலம். என வருந் தேவார அடிகளிற் காண்க. செய்யுள் 15. (தாவடி) அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாக்களிலும் ஏனைய பாக்களிலும் பல பாடல்க. ளில் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும் அரிய பொருத்தம் காணப் படும். அதற்கு இச் செய்யுள் ஒர் உதாானம்; எங்ங்னம் திருமாலின் திருவடியானது கீழும் மேலும், ஆட்கொள்ளப் பட்ட மாவலியின் தலையிலும் பட்டதோ அதுபோல முருகவேளின் திருவடி கீழேயுள்ள மயில் மீதும், மேலே யுள்ள தேவர் முடிமீதும், ஆட்கொள்ளப்பட்ட அருணகிரி யாரின் பாவடி ஏட்டிலும் பட்டது. இதனுல் பெறப்படுவது யாதெனில் மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாகூஜியாய்த் தத்தம் ஆணவம் கீழடக்கப்பட்டு இறை வல்ை திருவடி திகூைடி செய்யப்பட்டு ஏன்று கொள்ளப்பட் டனர் என்பது இவ்வுவமை நயம் ஒர்ந்து களிப்புறற்பாலது மாவலி திருவடி தீகூைடியால் ஏன்று கொள்ளப்பட்டார், அரு னகிரியார் அவர் அருளிய பாடல்களில் திருவடி முத்திரை வரப்பெற்று ஏன்று கொள்ளப்பட்டார். செய்யுள் 16. (தடுங்கோள்) ; இருந்தபடி இருங் கோள் என்பதற்குத் தாமசம், ராஜசம் என்னுங் குணங்க ளாற் பீடிக்கப்படாது, எப்பொழுதும் உங்களுக்கு இயற் கையாய், அடி ஆதாரமாய்ச் சுத்த நிலையாயுள்ள சாத்து