பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரலங்காரம்1 1613 விக குணத்துடனே இருங்கோள் - என்பது பொருளாம். தாமசம், ராஜசம் என்னும் குணங்கள் இருந்தபடியில்-இருந்த, நி?லயில் - இல்லாது, இருந்த நிலை மாறும்பொழுது வருங் குனங்களாம் : எனக்குச் சோம்பல் வந்திருக்கிறது', 'எனக் குப் பெருங் கோபம் வந்தது’-எனும் சொல் வழக்கால் இயற்கையாகிய சாத்துவிக குணம் மாறினுல் வருங்குணங்: கள் தாமதம், ராஜசம் என்பன - என்பதும், கோபத்தை வர ஒட்டாது நான் சும்மா இருந்துவிட்டேன் - என்னும் சொல் வழக்கில் சாத்துவிக நிலையே நமது இயற்கை நிலை-இருந்த, படி இருக்கும் நிலை - என்பதும் புலப்படுகின்றன. இனி, ' நிலையிற் றிரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மiனப் பெரிது’ என்னும் திருக்குறளின் கருத்துக் கிணங்க ...உயர்ந்த நிலை (பதவி) உங்களுக்குக் கிடைத்தாலும் முன் இருந்த அடக்கமுடனே, (கர்வம் படையாது), நிலை திரி யாது இருந்தபடி இருங்கோள்-என்றும் பொருள் கொள்ள லாம். செய்யுள் 22 (மொய்தார்); முத்தமிழால் வைதாரை யும் அங்கு வாழவைப்போன்’-முருகவேள் தன்னை வைதா ரையும் வைத இடத்திலே, வைதபொழுதே-வாழ வைப்ப வன் என்பதற்குச் சாகூஜி அப்பாட்டின் முதலிலேயே மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவன்’ என்பதிற் சொல்லாமலே சொல்லப்பட்டுளது. வள்ளியை வாழ வைத்தார் முருகர் என்பது தெரிந்த விஷயம். முத்தமி முால் வள்ளியம்மையார் முருகரை வைதாரா என்பதை ஆராய்வாம். ஆம். வைதது உண்மையே’-இதற்குச் சான்று (வள்ளிப் பிராட்டியின் வைதற் சொல்லைக் கேட்ட அம்முருகரே தமது கைப்பட ஆய்ந்து திருத்திய) பின்வருங் கந்தபுராணச் செய்யுளிற் காண்க. "நத்துப் புரைமுடியிர் நல்லறிவு சற்றுமில்லீர் எத்துக்கு 醬 இழிகுலத்தேன் தன்னை வெஃகிப் பித்துக்கொண் டாற்போற் பிதற்றுவீர் இவ்வேடர் கொத்துக் கெலாமோர் கொடும்பழியைச் செய்திரே." (வள்ளி திருமணம்-108). அ-11