பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரநுபூதி) 173: வரை-தினம் 6, வெள்ளி 7, சனி 8, பாடல்களாகப் பிரித்து வரிசையாகப் பாராயணஞ் செய்து 51-பாடல்களையும். வாரத்துக்கு ஒரு முறை முடிக்கலாம். அதுவும் முடியாதவர் ஆடும் பரி (1), கெடுவாய் மனனே (7), கார்மாமிசை (10), மாவேழ் சனனம் (39), கைவாய் (14), உருவாய் (51)எனத்துவக்கும் ஆறு பாடல்களை நித்ய பாராயணமாக வைத்துக் கொள்ளலாம். 51.செய்யுள்களுக்கு மேல் உள்ளன. வாக அச்சிடப்பட்ட பாடல்கள் சுவாமிகள் வாக்கல்ல, அவை: கள் ஒதுக்கப்பட வேண்டும். தணிகை உலாவில் அநுபூதி ஐம்பதுமே” என்ருர். இனி எங்கள் பதிப்பிற் சேர்க்கப் படாத சிற்சில பாடற் குறிப்புக்களை இங்குக் குறிப்பேன் : செய்யுள் : (காப்பு-நெஞ்சக்) நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக’-இதைக் கல்லை மென்கனியாக்கும் விச்சை என்ருர் திருவாசகத்தில். செய்யுள் 1. (ஆடும் பரி): இச் செய்யுள் தான் இந் நூலுக்கு மந்திர நூல் எனப் பெயர் வந்ததற்குக் காரண மாகும் போலும். இச் செய்யுளின் முதல் இரண்டு அடி களில் வேலு மயிலுந் துணை' என்னுந் திருமந்திரம் மறை பொருளா யிருக்கின்றது. அது எங்ங்ணம் என விளக்கு வாம். ஆடும் பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியா(க) அருள்வாய் என்பது முதலிரண்டடி. ஆடும் பரி=மயில் : அணி=அழகிய ; சேவல்=துணை (காவல்); சேவல் என்னும் சொல்லுக்குத் துணை, காவல் எனப் பொருள் உண்டு. கந்தரந்தாதியில் உ யி ர் ச் சேவலுக்கே (15) என வருவதைக் காண்க. வேலும் மயிலும் அழகிய துணையாம் எனப் பாடும் பணி ; பாடும் பணி = உருப்போடும் பணி ; (ஜெபம் செய்யும் பணி); பாடுதல் = கூறுதல், சொல்லுதல் ( அறம்பாடிற்றே - புறநானூறு 34), ஆகவே, வேலு மயிலுந் துணை எனக் கூறும் (ஜெபிக்கும்) பணியே எனக்குப் பணியாக அமைய அருள்வாய்-என்பது பிரார்த்தனை. மயிலை முன்பு கூறி வேலைப் பின்பு கூறினது-சிவாயநம-நமசிவாய என்பது