பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206 அருணகிரிநாதர் இலக்கண நூல்களின் ஆசிரியர்கள் எழுதியுள்ளார்களாத லால்-தாள நுட்பமெல்லாம் உணர்ந்த உயர் பெருஞ்செல் வருமாவார் அருணகிரியார். தம்மையாண்ட ஆண்டவனது திருநாமத்தை முரச வாத்தியத்தின் தாள ஒலியிலும் அவர் காண்கின்ருர். குமர குருபர *குமர குருபர குமர குருபர என தாளம் குரைசெய் (ஒலிசெய்) முரசம் (திருப். 517) என்கின்ருர். 7. அருணகிரியார் திருப்புகழ்ப் பாவகைக்கு ஆதிகர்த்தா முருகபிரானது திருவருளால் அருணகிரியார்க்கு என்றே அவர் கேட்டுக் கொண்டபடி தனிச் சிறப்பு வகையில் புதுவகையாகச் சந்தப் பாக்கள்-அடி தொறும் தொங்கல் ஒன்றும் அழகு மிக அமையுமாறு-அமைந்தன. பாடலின் முடிவு 'பெருமாளே', 'தம்பிரானே' எனப்பொலி வுற அமைந்தது. அங்ங்ணம் தொங்கலுடன் பாடு என்று எடுத்துக் காட்டினவர் நமது முருகவேளே போலும். முத்தைத்தரு பத்தித் திருநகை” என்னும் முதல் திருப்புகழில் ஆண்ட வன் முத்தைத் தரு முதல் என ஒது -என்னும் தொங் கல் வரையும் எடுத்துக் கொடுத்து ஒது என்பதை ஏவல் வினையாக-ஒதுவாயாக-என அருணகிரியார்க்குக் கட்டளை .யிட்டுத் 'தத்தத்தன தத்தத் தனதன” என்னும் சந் தத்துக்குத் தனதான” என்னும் ஒரு தொங்கலையும் பூட்டிக் காட்டினர் போலும்; அங்ங்னம் பூட்டினது தங் கச் சங்கிலிக்கு ஒரு மதாணி-ஒரு பதக்கம் பிணைத்தது போலப் பொலிவைத் தருகின்றது. எடுத்துக் கொடுத்த அடியைக் கேட்ட அருணகிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டு-அவனருளாலே- என ஒது’ என்னும் ஏவல் வினையையே பெயரெச்சமாக அமைத்து-"என ஒது முக் கட் பரமற்கு என மேற்கொண்டு பாடலைக் கொண்டு போய் முடித்தனர் போலும். சுவாமிகள் அருளிய பாடல் களுக்குத் திருப்புகழ்' என்னும் பெயரை அளித்தவர் வயலூர்ப் பொய்யாக் கணபதியார் போலும். பக்கரை