216 அருணகிரிநாதர்
என்னும் நயம். நோக்கு என்பது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. படிப்பவரது மனக்கண் முன்னர்ப் படிக்கும் நிகழ்ச்சி அவர் நேரிற் காண்பது போல அவருக்குப் புலப்பட வைத் தலே நோக்கு.
இவ்வண்ணம் இறைவரிடம் வாக்கு வரம்பெற்ற அருண கிரியாரும் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்யைகம் என உலகுக்குத் திருப்புகழாம் அமுதத்தை, வாக்கின் பல்வகைத் திறனும் விளங்கத் திரட்டி அளித்துள்ளார். இவர் பாடிய திருப்புகழ்க் கவிச் சுவையை புலவர் ஒருவர் பின்வருமாறு வருணிக்கின்ருர்.
లి கனியை நறும்பாகில் உடைத்துக் கலந்து தேனை வடித்துாற்றி யமுதி லுடன்கூட்டி ஒக்கக்குழைத்த ருசி பிறந்து மதுரங் கனிந்த திருப்புகழ்ப் பா'
-திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் பிறிதொரு புலவர்'சத்தநிலை வழுவாம லத்தமொரு சற்றுந் தளர்ந்து வெளிருமல் அமுதந் தழுவு பதிருையிரந் திருப்புக்ழ்’
(விரிஞ்சை பிள்ளைத் தமிழ்) என்ருர். இவர் கவியின் பெருமையை உணர்ந்தல்லவோ நமது தமிழ் நாட்டில் திண்ணைப்பள்ளிக் கூடங்களிற் கல்வி கற்குஞ் சிருர் முதல் கல்வி நிரம்பிய பெரியோர் வரைத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடம் பண்ணி வந்தனர் ; இன் றும் திருப்புகழின் பெருமை ஒங்கி வளர்ந்து ஊரெங்கும் உலவுகின்ற தல்லவா! *
8. அருணகிரியார் அருளியுள்ள தத்வோபதேசம்
பெரியரிற் பெரியராந் தாயுமானவராற் பெரிதும் பாராட்டப்பட்டவரும், யாவதுங் கற்ருேரறியா அறிவின ரும், கற்ருேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமை வாய்ந்த வருமான பூரீ அருணகிரிநாத சுவாமிகள் தாம் அருளிய திருப்புகழாதிய நூல்களில் உலகுக்கு உய்யும் வழிகளை மிகத் தெளிவாகக் காட்டி யுள்ளனர். பிறவியென்னுங் கடலிடைப் பட்டு, துன்ப மென்னும் அலைகளில் எற்
பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/236
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
