பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


254 அநுபந்தம் 3 (3) கந்தரங்தாதி சாரம் இது போட்டிப் பந்தயத்திற் பாடின நூலாதலின் இந்நூலின் பொருளை அரிய கடின செஞ் சொற்கள் பலாச் சுளையை அப்பழத்தின் கரடு முரடான தோல் மூடி யுள்ளது போல, மூடியுள்ளன. பலாப் பழத்தைக் கீண்டி நறுஞ் சுளைகளை எடுப்பது போல, இவ்வந்தாதியின் சொற் களை ஆய்ந்தால் பெருஞ்சுவைச் சுளைகள் கிடைக்கும். அவை வற்ருச் சுவையன, தெவிட்டாச் சுவையன. பல நல்லுபதேசங்களைக் கொண்டுள்ள நூல் இது. ஆறு திருப்பதிகளையும் புகழுங்கள், சேது முதலிய ஸ்நானம் வேண்டாம், திருச்செந்துார்த் தியானமே போதும் என நற்கதிக்குக் குறுக்கு வழியைக் காட்டியும், வள்ளிகணவ ! சூராந்தக 1 எனக் கூறக் கோள்களால் வரும் தடுமாற்றம் வாராது எனப் புலப்படுத்தியும், முருகன் திருவருள் கூடு வதால் பொறுமை பிறக்கும், பொறுமையால் வெகுளி முதலிய தியன இறக்கும் என்னும் உண்மையைத் தெரி வித்தும், தேவ சேனையைத் தியானிப்பதால் வறுமை ஒழியும், வேலைத் தியானிப்பதால் கூற்று அகலும், பிறவி வாராது, கோழி அஞ்சல் என ஆண்டருளும் என்னும் ரகசியப் பொருள்களை இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தி யும், கருணைக் கருணகிரி எனத் துலங்குகின்ருர் அருண கிரியார். இந்நூலுக்கு உயிர்நிலைப் பாடல் சேயவன் புந்தி ' (48) என்பது. (4) கந்த ரலங்கார சாரம் சுவாமிகள் பத்தி நிலையிலே உன்னத நிலையில் இருந்த பொழுது பாடின பல பாடல்கள் இந்நூலிற் காணலாகும். பத்திப் பெருக்கால் ஏற்பட்ட திடத்தால் பிரமனையும், இய ம2னயும், நாள்களையும், கோள்களையும் வெருட்டுகின் ருள். காமத்தை வென்றேன், அயன் கையெழுத்து அழி பட்டது, நிலைத்த புத்தி கிடைத்தது, மெய்யன்பர் இணக்கம் பெற்றேன் என மகிழ்கின்ருர். முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன் என்பதற்குச் சாகூஜி மொய்