பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 3 257 வேனியர்க் கருள்கூரும் * சத்யவாசகம் புற்புதப் பிராணனுக் கருள்வாயே.” [1251] இங்ங்னம், இரங்கிக் கேட்டும் அந்த ரகசியப் பொருள் கிடையாததால் அருணகிரியார் வேறு தந்திரங்களையும் செய்து பார்த்தனர். அதாவது, முருகா ! உன் தந் தைக்கு உபதேசித்த ரகசியத்தை எனக்கு உபதேசஞ் செய்ய உனக்கு மனமில்லா விட்டால் வேண்டாமை” என்கின்ற ஒன்றை (நிராசையை) அடைந்து உள்ளம் ஒடுங்கும் அன் புப் பேற்றினையாவது தந்தருளுக என வேறுவரம் கேட் பது போல வேண்டிப் பார்த்தார். இதனை 'மாண்டா ரெலும்பனி' என்னுந் திருப்புகழில், கடையாண்டார் இறைஞ்ச மொழிந்ததை* (அருளா யேல்) வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம் மீண்டாறி நின் சரணங்களில் வீழ்ந்தாவல் கொண்டு உருகு அன் பினை உடையேனுய்’-(1187) என வருவதால் அறிகின்ருேம். of H- so போலும். பின்னர், நீ கங்கை சூடிக்குச் செய்த உபதே சத்தை எனக்கு உரை செய்தால் உன் குருத்துவம் சற்றே னும் குறையுமோ” எனச் சற்று வைதும் பார்த்தார். இதனை கங்கை வைத்த நம்பர் * பெறப் பகர்ந்த உபதேசம் சிறியேன் தனக்கும் உரைசெயிற் சற்றும் குருத்துவங் குறை யுமோ தான்?’ எனவருந் திருப்புகழிற் (723) காண்க. இங் நன்னம் பலவிதம் அந்த ரகசியத்தை அறிய முயன்ற அருண கிரியார் ஈற்றில் வென்றனர். அந்த ரகசியத்தை அருண கிரியார் வேண்டுகோட் கிரங்கி முருகபிரான் அவர்க்கும் உபதேசித்துள்ளார் என்பதையும் அது இன்னது என்பதை யும் குறிப்பாகக் கந்தரநுபூதியிலும் சற்று வெளிப்படையாகக் அ-17 இத்தந்திரத்துக்கும் இறைவன் அகப்படவில்லை

  • {