பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 அருணகிரிநாதர் மூர்த்தியாகவும் சற்றேனும் பேதமின்றி இவருக்குத் தரிசனம் கிடைத்த காரணத்தால், ' மலைமகள் உமைதரு வாழ்வே நமோ நம எனக் குக னைக் குறித்தும், 'திரிபுர மெரி செய்த கோவே நமோநம'எனச் சிவனைக் குறித்தும் கலம்பகமாக ஒரே பாடலில் வரு கின்ற 'அவகுண விரகன” என்னும் பாடல் (611) இவர் திருவாக்கினின்றும் எழுந்தது. பின்னும், நடன ஸ்தலமாதலின் கலகல என்றும் கன கண என்றும் சிலம்பொலி, தாள ஒலி, நடன ஒலி ஒலித்த நாதமே இவரைப் பரவசப் படுத்திய காரணத்தால் இத்தலத்துப் பாடல்கள் பல வகைய நாத ஒலி நிறைந்த அற்புத கரமான சந்த பேத ஒலிகளுடன் பொலிவனவாய் விளங்குகின்றன. கிடைத்துள்ள 1307 பாடல்களுக்கு ஏற் பட்ட 1008-க்கு மேற்பட்ட சந்த பேதங்களிற் சிதம்பரத்துக்கு உரிய 65-பாடல்களுள் இரண்டு பாடல்கள் தவிர ஏனை யவை தனித் தனிச்சந்தங்களாய் அமையப் பெற்று மொத் தம் 68-வகைச் சந்த பேதங்கள் கொண்டு திகழ்கின்றன. அவை யும் சிலம்பொலிக்கு ஒத்தனவாய்த் தாளபேதங்கள் சிறக்க மெல்லோசை பிறங்குவனவாய் விளங்குகின்றன. அரு ணைக்கு (78) அடுத்தபடியே சிதம்பரமே (6.5) அதிக பாடல் களைக் கொண்டுள்ளதால் இத்தலத்திற் சுவாமிகள் பலநாள் இருந்திருக்க வேண்டும். இத்தலத்துப் பாடல்களிற் புலி யூர், புலிசை, புவீச்சுரம், கனக சபை, கனகம்பலம், பொன் னம்பலம், திருச்சிற்றம்பலம், திருவம்பலம், சிதம்பரம், மன்று, தில்லை, பெரும்பற்றப் புலியூர் என்னும் நாமங்கள் யாவும் வந்துள்ளன. தில்லை வாழ் அந்தணரது சிறப்பும்1 (625) சிவகாமி யம்மையின் திருநாமமும் (597, 600, 608, == 1. 625. இவ் வழகிய பாடலில் உள்ள வேத நூன் முறை வழுவா மேதினம் வேள்வி யாலெழில் புனைமூ வாயி = . மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே'