பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 39 அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியனும்... -வேடிச்சி காவலனே வ. அறும் திருவகுப்பால் தெரிகின்றது : பின்பு, திருவிடைக் கழியினின்றும் புறப்பட்டுத் தக்கன் யாகத்துக்கு வந்த தேவர்களது தீமையைப் பறித்த தல மாகிய (29A) 1திருப்பறியலூரை வணங்கிச், சிவபிரான் யா%னயை உரித்த தலமாகிய (30) வழுவூரை (818, 814) வணங்கி, அடிநாளில் முருக பிரான் தமக்குத் திருவடி திசைவடி செய்து மயில் மீது தம்முன் வந்து காகூசி தந்து ருனுேபதேசம் செய்து உதவியதைத் 'தலைநாளிற் பதம் ஏத்தி, அன்புற உபதேசப் பொருள் ஊட்டி, மந்திர தவ கருமனக் கடலாட்டி என்றன...முத்தமிழுட்டி கதிர்தோகைப் பரிமேற்கொளுஞ் செயல் மறவேனே' (814) என நன்றி பாராட்டிப் போற்றினர். பின்பு (31) கந்தன் குடியை 1805) வணங்கி நக்கீரருக்கு அருளினதைப் பாராட்டி, அங் கிருந்து (32) திலதைப்பதி (806-808) என்னும் தலத் துக்குச் சென்று தரிசித்து உலகள் புகழைப் போற்ருது உன் உரிமைத் திருபுகழைச் சொல்லித் திரியும் பணியே வேண்டு வேன் (808) எனப் பணிந்து, பின்பு சோமாசி மாற நாயனுர் முத்தியடைந்த தலமாகிய (33) அம்பர் (809) என்னுந் தலத்தை அடைந்து, ஆறுமுகப்பிரானது குழந்தைத் திரு விளையாடல்களைச் சிறப்பித்துப் பாடி, அதற்கு அருகில் ள்ள (34) அம்பர் மாகாளத்தைச் (810) சேர்ந்து குரு நாதா நான் நிதமும் 'நாதா குமரா I முருகா !” என ஒத நினது திருவருட் பேற்றினைத் தந்தருளுக' என வேண் னர். பின்னர், (35) திரு நள்ளாறு’ (812) வந்து சேர்ந் தனர். இத்தலத்துத் தேவியார் 'போக மார்த்தபூண் முலையா”ளது திருநாமங் கொண்ட திருப்பதிக ஏடு அல் லவா அன்று சம்பந்தப் பெருமான் சமணரொடு வாது செய்து நெருப்பிலிட்ட பொழுது வேகாது பச்சை'யா _ 1. திருப்பறியலூர்-திருப்புகழ் வைப்புத்தலம்-திருப். 439.