பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அருணகிரிநாதர் நீனெறி" என்னும் தலத்தை வணங்கி (45) வேதாரணியம்: வந்து சேர்ந்தார். 5. வேதாரணியம் முதல் கும்பகோணம் வரை : (14 தலங்கள் : 45-58) திருத்தணி, செந்தில், பழநியிற் போலப் பெருமான் (45) வேதாரணியத்திற் (843-845) சிறப்புற்று விளங்கு வதைக் கண்டு தரிசித்து ஆனந்தம் உற்ருர் (844-45) ராவணனைக் கொன்ற வீரகத்தி நீங்க பூரீ ராமர் அருள் பெற்ற தலமாதலின் பூரீ ராமர் சரிதம் இத்தலத்து மூன்று பாடல்களிலும் சொல்லப் பட்டுளது. வேதா ரணியத்திலிருந்து சென்று (46) கோடிக் குழகர் கோயிலைப் (846) பணிந்து பாடினர். இத்தலத்துப் பதிகத்தில் 'வன வேடர் விழ சோதி கதிர் வேலுருவு மயில் வீரா” என்ருர். வள்ளியைத் திருடி வந்த பொழுது வேடர் கள் தொடர்ந்து வர அவர்களைத் தமது வேலால் முருகர் வீழ்த்தினர் என அருணகிரியார் கூறுகின்ருர். இப் படியே பொருளின் மேல் என்ற 341-ஆம் பாடலிலும், கலக சம்ப்ரம' என்னும் 940-ஆம் பாடலிலும் கூறியுள்ளார். ஆனல் கந்த புராணத்தில் முருகவேள் தமது சேவலின் ஒலியால் வேடர்களை வீழ்த்தினர் எனக் கூறப்பட்டுள்ளது. மீண்டும். வேதாரணியத்தைத் தரிசித்து (47) எண்கண் (839) என் னுந் தலத்துக்கு வந்தனர். அங்கு, முருகா! எனது மனம் வாக்கு, காயம் மூன்றும் உனக்கே ஆகும் வண்ணம் சந்ததம் புகழ்ந்து (வாக்கு), உணர்ந்து (மணம்), செம்பதம் பணிந் திரு (காயம்), என்று மொழிந்தருள்வாய்' என வேண்டி னர்; பின்னர்க் (48) குடவாயில் (840-841) என்னுந் தலத் தைச் சேர்ந்து தரிசிக்க அங்கு முருகவேள் சம்பந்தப் பெரு. மானது 'மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டச் சம்பந்: தரே முருக ரெனும்படி மிக அருமை வாய்ந்த சுருதியா யியலாய்” என்னும் (841) திவ்யமான திருப்பதிகத்தைப் பாடிப் 'பெருமானே ! யாவரும் அறியொணுததை நீ குரு வாய் எனக்குப் பகர்ந்தாயே இப்பேறு யான் முன் ஜென்