பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 41 அடியே வாக மருவும் அழியா வரம் ஒன்றையே யான் விருi |கின்றேன்’ எனக்கூறி, மணிவாசகப் பெருமான் 11வ த் தக்க தறிவோய் நீ" என்றது போலத் தாமும் தமக்கென்று ஒரு இச்சை வேண்டாம் என்னுங் கருத்துடன் ! நீ எதைக் கொடுக்க விரும்புகின்ருயோ அதைக் கொடு |'இறைவா! எதுதா அதுதா!')-எனப்பாடி (834) வங்கினர். நாகையை விட்டுத் (42A)1 தேவூரை வணங்கி, 15) காட்டிகுடி (835-838) என்னும் தலத்தை அடைந்து, பிரா%னத் தரிசித்துப் பரவசம் அடைந்து, திருநாவுக்கரசு சுவாமிகள் பெண்ணுகடம் என்னும் தலத்தில் சிவபெரு மானே-என் ஆவியைக் காக்க உனக்கு இச்சையுண்டேல், கற்றுவன் என்னைக் கண்டதும் விலகி நிற்க (நான் உன் அடிமைப் பொருள் என்பதற்கு அடையாளமாக) உனது "மூவிலைச் சூலம் என் மேற் பொறி', 'இடபம் பொறித்து என்னை ஏன்று கொள்ளாய்” என விண்ணப்பித்தது போலத் தாமும்-நாயேன் ஒயா தலையாதே-'தற்பொறி வைத் தருள் பாராய் எட்டி குடிப் பதிவேலா 1-என விண்ணப் பித்து (838), என்றைக்கு எம்பெருமான் தமது வேற்பொறி, பயிற் பொறியிட்டு என்னை ஆண்டருள்வாரோ எனக் கவலை கொண்டனர். எட்டி மரத்துக்குக் 'காஞ்சிரம்” என ஒரு பெயர் இருப்பதால் எட்டிகுடி என்பதை காஞ்சிரங்குடி எனப் பெயர் புனைந்து ஒரு பதிகம் பாடினர் (836). இத்தலத்தும் தாம் கனவிற் கண்ட வயலூர்ப் பெருமான மறவாது 'வய ஒாரா எனத் (838) துதித்தார். பின்பு (44) வலிவலம்' (842) என்னும் தலத்தை அடைந்து சீகாழிப் பதிகத்திற் (769) போலத் திருநீற்றின் பெருமையையும், ஹர ஒலியின் பெருமையையும் சிறப்பித்துப் பின்னர்க் (44A) கைச் ரினத்தைத்2 தரிசித்துப் பின்னர்த் (44B)3 'தண்டலை 1. தேவூர்-திருப்புகழ் வைப்புத்தலம்-திருப். 439. 2. கைச்சினம்-திருப்புகழ் வைப்புத்தலம்-491ஆம் பாடல் 'முத்துரத்ன் சூத்ரம்' என்பதின் பாட பேதத்தைப் பார்க்க. # 3. தண்டலை-திருப்புகழ் வைப்புத் தலம் -(28-திருப்)