பக்கம்:அருமையான துணை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அனுதாபம்

வன் அப்பாவியாகத் தோற்றம் கொண்டிருந்தான். மனிதக் கும்பலிடையே தனித்துநிற்கும் படியான தோற்றம் அவனுக்கு இல்லையாயினும், அவன் ஒரு விசித்திர மனிதன்தான். அவனோடு சிறிது பழகியவர்களுக்கும் அது புரிந்துவிடும்.

அவன் மட்டும் முண்டி அடித்து முன்னேறித் தன்னை சதா உணர்த்திக்கொள்ளும்-மற்ற அனைவர் நோக்கிலும் கருத்திலும் உறுத்திக்கொண்டிருக்கக்கூடிய-சாமர்த்தியத்தைப் பெற்றிருந்தானானால், அவனுடைய அந்தத் தனிப் பண்புக்காக அவனுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டிருக்கலாம். 'மகான், மகாத்மா' என்று போற்றிப் புகழ்வதற்கும் அவனைச் சுற்றிலும் கும்பல் கூடியிருக்கவும் கூடும். ஆனால் அவன் அரசியல்வாதி இல்லை.

அவன் ஒரு செல்வராக இருந்து, இந்தப் பண்பை விளம்பரப் பகட்டுடன் வெளிச்சமிடக் கற்றிருந்தால், அவனுக்கு அர்த்தம் விளங்காத வடமொழிப் பெயர் கொண்ட பட்டங்களை வழங்க ஞானிகளும், ஆதீனங்களும் மடத்தலைவர்களும் முன்வந்திருக்கக்கூடும். அவனை ஞானி என்றும், தியாகி என்றும், ஜீவன் முக்தன், சித்தன். என்ற தன்மைகளிலும் கூடப் பாராட்டி விழா எடுக்க அடியார் திருக்கூட்டம் எப்போதும் சித்தமாகக் காத்திருக்கவும் கூடும்.

அவனோ அத்தகைய சிறப்புகள் எதையும் பெற்றிராத, எனினும் வாழ்க்கைப் பாதையிலே ஒவ்வொரு நாள் பயணத்தையும் மற்றவர்களுக்குப் புலஞகாத-பிறர் புரிந்து கொள்ளவும் தயாராக இராத-தியாகங்களைச் செய்தபடி நடத்தியாக வேண்டிய நிலையில் உள்ள மத்திய தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/19&oldid=966780" இலிருந்து மீள்விக்கப்பட்டது