பக்கம்:அருமையான துணை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுதாபம்

11

வர்க்கத்தை, அதிலும் அவ்வர்க்கத்தின் கீழ்த்தட்டை சேர்ந்த சாதாரண மனிதனாக இருந்தான்.

அவனுக்கு அப்படி ஒரு இதயம் ஏன் வாய்த்தது? வாழ்க்கையையே மென்னியை அழுத்தும் பயங்கரமான சிலுவையாக ஏற்றுக் கூனிக்குனிந்து திரியும் அந்த அப்பாவிக்கு ஏன் இந்த விசித்திர சுபாவம்?

மழை பெய்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் கனத்த மழைதான். அவன் வீட்டில் ஜன்னலின் பின்னிருந்து, சரிந்து விழும் மழைக் கம்பிகளையும், ஓடிப் பதுங்கும் மனிதர்களையும், குடை பிடித்து சாவகாசமாக நடப்பவர்களையும், வேடிக்கை பார்த்தபடி பொழுதுபோக்குகிறான். அப்போது ஒரு மாடு நனைந்துகொண்டே வந்தது. ஒரு வீட்டின் ஓரமாக ஒதுங்க முயலுகிறது. அங்கே மழைக்கு ஒதுங்கி நின்றவர்கள் அதை விரட்டுகிறர்கள். அது மிரண்டு பார்வையைச் சுழற்றியபடி மீண்டும் தெருவில் நடக்கிறது.

அதன் அந்தப் பார்வை அவனை என்னவோ செய்கிறது. அந்த மாட்டுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும், எப்படி உதவுவது எனத் தெரியாத தவிப்பும் அவன் உள்ளத்தில் கவிகின்றன. அது சிறு வேதனையாய்க் குறுகுறுக்கிறது. அதை அமுக்கிக்கொண்டு வேறொரு வேதனை அங்கே படர அல்லது பழைய வேதனையே கனத்துப் பெரிதாகிச் சுமையாய் அழுத்த உதவுகிறது வேறொரு காட்சி.

சிறுவன் ஒருவன் தலைகுனிந்து நடந்துபோகிறான். தலை மீது விழும் மழையோ, கைகளில் பாரமாய் இழுக்கும் ஐஸ் ஜாடிகளே அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவே முழுப்பெரும் காரணம் ஆகிவிடாது. மழை பெய்வதனால்-இன்னும் தொடர்ந்து பெய்யும் எனத் தோன்றியதனால்-ஜஸ் விற்க வழி இல்லை; எனவே அவன் பிழைப்பில் மண்தான் என்ற எண்ணமே அவனை அழுத்தி, மண்ணைப் பார்த்துக் குனிந்தவாறு நடக்கச் செய்தது.

ஜன்னலுக்குப் பின்னிருந்து பையனைக் கவனித்த அவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. ஐஸ் விற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/20&oldid=966781" இலிருந்து மீள்விக்கப்பட்டது