பக்கம்:அருமையான துணை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாகம் క్షీ : அவன் தரையில் எதையோ பரப்பி, இழுத்து, மேலும் இழுத்து இழுத்துப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.

  அவர்கள் தரையையும் அவனையும் பார்த்துவிட்டு, உடனடியாக ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள்.
 கைலாசம், என்னவே செய்கிறே? என்று ஒருவன் குரல் கொடுத்தான்.
 அவர்கள் அறைக்குள் வந்ததும், அவனுக்குத் தெரியாததுபோலவே தோன்றியது.
சனியன் இந்தச் சமுக்காளத்தைப் பாரேன்; திடீர்னு: இது ஏன் கட்டையாப் போச்சு? இல்லே, திடீர்னு நான் எப்படி நெட்டையா வளர்ந்தேன்? நேற்று வரை எனக்குச் சரியாக அளவாகத் தானே இருந்தது? இப்போ இதிலே படுத்தா, என் தலையும் காலும் தரையிலே படுதே' என்று முணுமுணுத்தான் கைலாசம்.
  அவர்களுக்கு அதை நிரூபிக்க முயல்பவன்போல் படுத்தான். காலேயும் தலையையும் தரையில் இடித்துக்கொண்டான்.
 நண்பர்கள் திகைப்புடன் பரஸ்பரம் நோக்கினர். அங்கே தரைதான் இருந்தது. விரிப்பு எதுவும் இல்லை. கைலாசம் வெறும் தரையைத் தான் சமுக்காளம் எனக் கருதியும், அது தனது நீளத்துக்குப் பற்ருமல் தீடீர் மாற்றம் பெற்றுவிட்டது என நம்பியும்செயல்புரிந்துகொண்டிருத்தான்.
  என்ன கைலாசம் இது? இங்கே துணியோ விரிப்போ இல்லையே? நீ வந்து...' என்று இரண்டாவது நண்பன் பேசினான்.
 கைலாசம் அவனே ஒரு மாதிரி உற்று நோக்கினன். அது இயல்பான பார்வை அல்ல. ஏதோ மயக்கவெறியில் இருப்ப வனின் குறிப்பற்ற நோக்கு.
  இல்லையா? சமுக்காளம் இல்லையா? திடீர்னு எங்கே போயிட்டுது அது?. ...” -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/52&oldid=1301050" இலிருந்து மீள்விக்கப்பட்டது