பக்கம்:அருமையான துணை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் 79 ‘ரயிலடியிலே மூக்கத்தேவன் வண்டி காத்துக் கிடக்கும். என்னைக் கண்டதுமே, ஆச்சி வாங்க, ஆச்சி வாங்க'ன்னு ஓடி வருவான். என் கிட்டே காசு கூடக் கேட்கமாட்டான். வண்டி தயாரா இருக்கும்பான்...-இந்த விதமாகக் கனவை-அல்லது முன்னுெரு காலத்தில் நிகழ்ந்ததன் தினைவை-அவள் சொல்லாக்கி மகிழ்ந்தாள். அவர்கள் ரயிலே விட்டு இறங்கும்போது நடுப்பகல் மணி 12.10. வெயில் கடுமையாகக் காய்ந்துகொண்டிருந் தது. சுற்றிலும் வறண்ட பொட்டல் காடு. அது ஒரு காட்டுப்புற ஸ்டேஷன். இங்கிருந்து சில மைல் துரம் போய்த்தான் எந்த ஊரையும் அடைய வேண்டும். நல்லூரைச் சேர ஐந்து மைல் கடக்க வேண்டும். பஸ் போக்குவரத்து சிலந்தி வலைபோல் சகலவிதமான ஊர்களையும் தொட்டுப் பரவிக்கிடக்கிற இந்த நாட்களிலே கூட நல்லுருக்கு நேரடியான பஸ் தொடர்பு கிடையாது; வேறு எங்கோ போகும் ரூட் பஸ் ஸில் இடம் பிடித்து, நாலாவது மைலில் இறங்கி, ஒரு மைல் தூரம் நடந்தே தீர வேண்டும் என்பதை அறிந்ததும் கைலாசத்துக்குப் பகிர் என்றது. ஒரு மணிக்குத்தான் பஸ் வரும் என்று கேள்விப் பட்டதும் அவன் குழப்பம் அதிகரித்தது. அதுவரை என்ன செய்வது? சாப்பாடு? குடிக்கக்கூட நல்ல தண்ணீர் கிடைக்காத இடமாக இருந்தது. அது, ஸ்டேஷனில், ஒரு தகர டப்பாவில் வைத்திருந்த குடி தண்ணிர் வெயிலில் கொதிப்பேறியிருந்தது. அதைக் குடித் தால் தாகம் தணியாது; தொண்டை கட்டிக்கொள்ளும்’ என்று செல்லம்மா சொன்னுள். அங்கு வண்டி எதுவும் கண்ணில் படவேயில்லை. இப்ப வெல்லாம் வாடகை வண்டிங்க ஸ்டேஷனுக்கு வர்ரதே யில்லே. முன்னுடியே சொந்தக்காரங்களுக்குக் கடுதாசி போட்டிருக்கணும். அவங்க ரயிலுக்கு வண்டி கொண்டு வரு வாங்க என்று ஒருவன் சொன்னன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே தான் காரு வந்திடுமே!’ என்றும் தைரியம் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/88&oldid=738775" இலிருந்து மீள்விக்கப்பட்டது